குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பூநகரி மக்கள் எங்குவாழ்தாலும் எம்மொழி பேசினாலும்எம்நினைவுகள் உறவாடிநனைக்கின்றன

பூநகரி மக்கள் எங்குவாழ்தாலும் எம்மொழி பேசினாலும்

எம்நினைவுகள் உறவாடிநனைக்கின்றன

வாடியடி ஆலமரநிழலை நினைக்கின்றன
காலடியில் உழவுசால்கள் தடக்கின்றன
நெல்அறுத்தபின் ஒட்டுக்கள் பாதத்தில் முட்டுகின்றன

குளத்துநீர்களுக்குள் குதிக்கம் சத்தங்கள் கேட்கின்றன
உழவு இயந்திரங்கள் சூடடிக்கும் சத்தங்களும் கேட்கின்றன
பயிர்கள் பச்சையாய் தெரிகின்றன காற்றில் அசைகின்றன.

சூரியர்தோட்ட இளநீர் இலவசமாய் இனிக்கின்றது
கொட்டுநாவல்  பழங்கள் குண்டு குண்டாய் விழுகின்றன
கிராஞ்சிக்குளத்திதுக்குள்ளே நாரைகள் இரைகின்றன
நடுவானில் கொக்குகள் வரிசையாய் பறக்கின்றது
வானமோ கருமையாய் விரிந்து படுத்திருக்கிறது.

பனைகளின் பச்சைஓலையை மறப்பதா

காவோலையை மறப்பதா கங்குமட்டையை மறப்பதா

கருக்குமட்டையை மறப்பதா கொக்காரையை மறப்பதா

அப்பஞ்சுடஉதவும் ஆண்பாளையை  மறப்பதா

கருப்பணியின் சுவையதை மறப்பதா பனாடையை மறப்பதா
பனங்காய்ப்பிட்டதின் வாசனை மறப்பதா

பனங்காய்ப்பணியாரம் ஒருநாள்

சென்றபின் அதன்சுவைதனை மறப்பதா

தேங்காய்ப்பால் எண்ணெய்ப்பிட்டதை மறப்பதா எதைமறப்பது
அவைதெரியாத குருத்தோலைகள் சிரிப்பது புரிகிறது
காவோலைகளே களவைவிட்டு களங்கமின்றிச் சொல்லுங்கள்
அவைசுவையென்று. கோவில் திருவழாவென்றால்

வாழையிலை தாமரையிலையில்உணவு.

முதல்சுற்று கறிகளுடன்  பொரியல்களும்

இராண்டாம் சுற்று சாம்பாறு குழம்புகளுடன்

மூன்றாம் சுற்று நீத்துப்பூசணிசொதியுடன்.

நிமிர்ந்திருது ஒருபிடிபிடித்துவிட்டு

மீதியை இலையுடன் வீசஇரண்டு

மூன்று நான்கு அய்ந்து நாய்கள் கடிபட்டு

இலைகளை நக்கிமுடித்துச் சென்றபின்.

இலைகளை இங்கிதமாய் ஆடுகள் மாடுகள் தின்றுமுடிக்கும்.

திருவெம்பாவை மணியோசைஇருபத்தொருபாட்டென்று

கணக்குவைத்து இரண்டு மூன்று கோவில்

படையல்பொருட்களில் பக்திகொண்ட  சிறுவராய் இருந்தோம்.

வட்டமாயிருந்து பத்து பதினைந்து கொத்து

மாவில் பச்சைத்தண்ணியில்  மோதகங்கள் அவித்தோம்.

பழங்கள் வெட்டி அய்ந்தமிர்தம்(பஞ்சாமிர்தம்) குளைத்தோம்.

பனங்கட்டிக்கூழ் குடிக்க ஆடிப்பிறப்பை கொண்டாடினோம்.
அதற்கு சோமசுந்தரப்புலவரின் பாடல்கள் பாடினோம் 
அருவிவெட்டினோம் பாடினோம் சூடடித்தோம் பொங்கினோம்
பச்சைவரியன் சாக்கில் நெல்லைக்கட்டி குறியிட்டோம்.

பள்ளிக்குடா மீன் நண்டு கணவாய்க்

கூட்டின்(கறிகளின்) சுவைமறவோம்.

கரிக்கோட்டுக்குள உயரிப்பிட்டி குஞ்சபிட்டி

தோட்டகத்தரிக்காய்க் பயித்தங்காய்கூட்டின்(கறியின்)

களிச்சுவையினை மறவோம். மறுநாள்பழம்சோற்றுடன்

தயிரும் சேர்த்து குளைத்து பூவரசமிலையில் கவழம் கவழமாய்

வாங்கி கௌவிக் கௌவியுண்டதை மறவோம்.

பெரும்படை அய்யநார் கோவில்  வேள்விப்பொங்கலை மறவோம்

முத்தரிசிப்பந்தல் காட்டும் அழகினை மறவோம் அந்தப்பறையிசை மறவோம்

அவர்கள் ஆடியதை ஓடியதை அரிசி வேப்பமிலை

தண்ணி பறித்து எறிந்ததை மறவோம்.

மண்ணாங்கும்பியில் தென்னை மட்டைவைத்து

சறுக்கி விளையாடியதை மறவோம் கோவில்களில்

வட்டகைகளளை  சுடச்சுட தண்ணியில் தோய்தெடுத்து

தோய்தெடுத்து புக்ககைத்தளிசைகளை அழகாக அடுக்கி

மண்டகப்படிகளில் அழகுபார்த்தோம் பத்தியுடன்

திருமுறைகள் (தேவரங்கள்)

சொல்லி மந்திரமில்லாது வழிபட்டோம்.

மந்திரங்கள் சொல்லும் கோவில்களிலும்
இத்தனையும் செய்தோம்

பத்தியுடன்  ஆண்டவனை வேண்டினோம்.

கண்டங்கள் நாடகளுக்கு நகரங்களுக்கு திக்கொன்றிற்காய்

சென்று சேர்ந்து பற்பல வெளிமாற்ங்கள் இருந்தாலும்

அன்றைய வாழ்கை அற்புதமாய் தெரிகிறது.

ஆரிதனைஏற்பரோ மறுப்பரோ தெரியாது! .

செத்தவீடு என்றாலும் ஒருஉடை

ஒருநடை ஒருமுறையான அழுகை.

உள்ளதைச் சொல்லி ஒப்பாரி

வெள்ளை நிறப்பாடை பச்சையோலையில்

பின்னியபன்னாங்கு  பறையிசை அக்கரைக்கு

இக்கரை பச்சையா இக்கரைக்கு அக்கரைபச்சையா

எம்மனதில் நினைவுகள் காயாத பசுமையே!

பொ.முருகவேள்.பூநகரி.25.10.2011 -திருவள்ளுவராண்டு -2042