குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதைவன்னியை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே பூநகரி அமைந்துள்ளது.

மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.தென்னாசியா மீதான சீனாவின் மூலோபாயத் திட்டமிடலில் சிறிலங்கா நான்காவது இடத்தில் உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான 50 சதவீத நிதி சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றது.

தென்னாசியாவில் உறுதியான தளத்தை அமைத்துக் கொள்வதுடன், நீண்ட கால மூலோபாய நலன்களையும் குறிக்கோள்களையும் அடைந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள சீனாவானது அதன் ஒரு கட்டமாக சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கான தனது நிதி ஆதரவை வழங்கிவருகின்றது.

 

சிறிலங்கா அரசாங்கமானது, தமது சொந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களைத் தனிமைப்படுத்துவது மட்டுமல்லாது, சீனத் திட்டங்களை தனது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றது.

 

சிறிலங்கா அரசாங்கமானது தற்போது சீனாவால் வழங்கப்பட்டுள்ள திட்டத்திற்கேற்ப அனைத்துலக தரத்தைக் கொண்ட விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக பெருமளவான நிலப்பரப்பை கையகப்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

சிறிலங்காவின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்தியாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சமன் செய்வதற்காகவே தற்போது அனைத்துலக தரத்தைக் கொண்ட விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனாவை அழைக்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.

 

வன்னியை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே பூநகரி அமைந்துள்ளது. இதன் ஒருபக்கம் பாக்கு நீரிணையுடனும், மறுபக்கம் யாழ் கடல்நீரேரியுடனும் தொடர்புபட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு கரையோரத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரம் மற்றும் தொண்டி ஆகியவற்றுக்கு அண்மையாகவும் அமைந்துள்ளது.

 

தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ 'எதிரிகள் தாக்குதல்களை' மேற்கொள்கின்றனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு உகந்த இடமாக பூநகரி அமைந்துள்ளதாலேயே சீனா இங்கே விமான நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பின் கொலனித்துவ நலன்களைப் பேணுவதில் சிறிலங்கா அதிபரின் மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான ஜொசித ராஜபக்ச முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளையில், யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவுக் கரையோரத்தில், பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவு மற்றும் இராமேஸ்வத்துக்கு அருகாக சுற்றுலா விடுதி ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையை சீனா ஏற்றுக் கொண்டுள்ளது.

 

இதற்கும் மேலாக, திரு.ராஜபக்ச பொது நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தாமல், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பில் சீன நாட்டின் நிதி ஆதரவுடன் மாதகலில் இரகசியமாக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவடிநிலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய கலங்கள் ஆகியவற்றை நிறுவுவதை நோக்காகக் கொண்டே மாதகலில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

சீனாவுடன் மலேசிய பிரதமர் மேற்கொண்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதார ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, சிறிலங்காவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒக்ரோபர் 2011ல் மலேசிய நிறுவனமான KLS Energy China Machinery and Engineering Corporation    உடன்  கைச்சாத்திடப்பட்டது.

 

சீனத் தொடர்பைக் கொண்ட இம் மலேசிய நிறுவனமானது மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான காற்றாலைகள் மற்றும் சூரிய கலங்களை, பனைமரங்களால் நிரம்பியுள்ளயாழ் குடாநாட்டின் கரையோரங்களில் நிறுவுவதுடன், அவற்றை அந்த மக்களுக்கு 'விற்பதை' நோக்காக் கொண்டுள்ளது. உண்மையில் யாழ் குடாநாட்டின் கரையோரங்கள் தற்போது பனைமரங்களால் நிரம்பியுள்ளன.

 

யாழ்ப்பாணத்தின் வட கரையோரம் முழுவதையும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான மிகக் கெட்டித்தனமான திட்டமாகவே இது உள்ளது. ஏற்கனவே இக்கரையோரமானது சிறிலங்கா இராணுவத்தின் தளங்களால் நிரம்பிக் காணப்படுவதுடன், சிங்கள 'பாதயாத்திரிகளுக்கான' மையங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், மலேசிய நிறுவனமானது தனது திட்டத்தை மேற்கொள்வதற்காக தற்போது யாழ்ப்பாணத்தின் வட கரையோரம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்மக்களுக்குச் சொந்தமான இப்பிரதேசங்கள் காலப்போக்கில் முற்றுமுழுதாக சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவதற்கான அபாயம் நிலவுகின்றது.