குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

6ஆம் நுாற்றாண்டிற்கு முற்பட்டஇலங்கை அரசுகளும் திராவிடஆரிய குடியிருப்புக்ளும்.நாகதீபம்(ஈழவூர்-பூநகரி)

 

பெருங்கற்கால மனிதர்களாகிய திராவிட இனமக்கள் இலங்கைத்தீவின் வடபகுதியில் நாகதீபத்திலும் கதம்பதி(மல்வத்தை ஓயா) கலாஓயா கலியாணியிலும் வளவகங்கை மாணிக்ககங்கைக்கு இடைப்பட்ட பகுதியான மகா கமத்திலும் மட்டக்களப்பு பகுதியில்தீகவாவியிலும் நிரந்தரமாக வாழந்து அரசுகளும் அமைத்தனர். பிற்காலத்தில் தீவின் மத்திய மலைப்பகுதியில் மலையக அரசு உருவானது. இவர்கள் செயற்கையான நீர்ப்பாசன நாகரிகத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். இப்பிரதேசங்களிற் காணப்படும் சிவப்பு கறுப்பு மட்பாண்டாங்கள் சான்றாகின்றது.

கலாநி க.குணராசா அவர்களின் ஈழத்தவர் வரலாறு என்ற நுாலை வாசியுங்கள். அதில் பூநகரி இராச்சியம் பற்றிய பலசான்றுகளை வரலாற்று ஆதாரங்களடனும் புவியியல் ஆதாரங்களுடனும் விளக்கி விபரித்து எழுதியுள்ளார். பூநகரி நல்லுாரில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற முருகன் கோவில்தான் யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் என்பதையும் யாழ் மணற்திடரில் நிலத்திற்கு கீழான நீர்ப்பயன்பாட்டினை மக்கள் அறியமுன் குடியேறியிருக்க வாய்ப்பு இல்லை என்றும். யாழ்பாடி யாழ்வாசித்து பரிசுபெற்றபின் அவனுக்கு பரிசாக யாழ்குடா நிலத்தையும் மக்கள் குடியிருப்புகளையும் புதிதாக உருவாக்கி பரிசளித்தார்கள் என்ற தமிழ் மரபுக்கதையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.அதே நுாலில் 65 பக்கத்தின் ஒரு பகுதியை இங்கு அப்படியே தருகின்றேன் சான்றாக...

கி.பி10 ஆம் நுாற்றாண்டளவில் பூநகரிப் பிரதேசம் சோழரின் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பற்கு ஆதாரங் களுள்ளன. அவ்வேளையில் அப்பகுதியின் சோழப்பிரதிநிதியாகவிருந்த புவனேகவாகு. பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற ஊர்ப் பகுதியில் தனது மாளிகையை அமைத்திருக்க வேண்டும் உண்மையில் இன்று கிடைக்கின்ற ஆதாரங்களில் இருந்து பூநகரியில் இன்று இருக்கின்ற நல்லுார் என்ற பிரதெசமே தமிழர் அரசின் புராதன நல்லுார் ஆகும் தென்னிந்தியாவில் பல ஊர்களுக்கு நல்லுார் எனப்பெயருள்ளது. ஆகவெ அத்தகைய ஒரு பெயர் இப்பிரதேசத்திற்கும் சோழர்கழால் இடப்பட்டிருந்தது.

முதலாம் பராந்தகன் ஆட்சியில்தான் தமிழநாட்டிலுள்ள சோழமண்டலமும் மண்ணியாறும் இதன் தென்எல்லையிலுள்ள நல்லுாரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. குஞ்சரமல்லன் என்ற பராந்தகனின் சிறப்புப்பெயர் மண்ணியாற்றின் மறுபெயராக அழைக்கப்பட்டது.பூநகரியில் இராசதானிக்குரிய கட்டிட அழிபாடுகளின் தென்னெல்லையில் சோழமண்டலமும் வடவெல்லையில் மண்ணியாறும் அதற்குச் சற்று வடக்காக நல்லுார் என்ற ஊரும்(இடமும்) காணப்படுகிறது.

பதினோராம் நுாற்றாண்டில் இலங்கையிலிருந்து சோழரைத் துரத்திட்டு இலங்கை முழுதும் முதலாம் வியயபாகு(1055-1110) வரையும் அரசனானான். அவன் ஆட்சிக்காலத்தில் வடவிலங்கை அவனாட்சியின் கீழ்ப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த புராதன பௌத்த விகாரைகைளுள் ஒன்றாகிய யம்புக்கோல விகாரையை புதுக்க அமைத்தான் என சூளவம்சம் கூறுவதிலிருந்து இது உறுதிப்படுகிறது. வியயபாகு இறந்தபின் கி.பி1110 ஆம் ஆண்டளவில் குலோத்துங்க சோழன் சோழராட்சியை மீண்டும் நிலைநாட்ட இலங்கைமீது படையெடுத்தான். அப்படைக்கு தலைமைதாங்கியவன்தான் கருணாகரத்தொண்டமான். என்னும் தளபதியாவான் அவன் யாழ்ப்பாணத்தைச் சிலகாலம் நிர்வகித்தான் தொண்டைமானாற்றை துறைமுகமாக்குவித்தான். தொன்டைமானாற்றில் விளைந்த தன்படுவான் உப்பை(தானாக விளையும் உப்பு) சோழநாட்டிற்கு ஏற்றுவித்தான். உரும்பிராயில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவிலைக் கட்டுவித்தான்.

இதன்பின்னர் சோழர்களின் தமிழ் இன விரோதங்களை குமரிநாடு சுட்டுகின்றது... இதன் மூலம் சோழர்களால் ஆரியக்கடவுளும் ஆரியமுறைகளும் பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இக்கோவில்களின் வரலாறுகளில் வட மொழி கலந்திருப்பதையும் சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொணடிருந்தனரே ஒழிய தமிழ் என்பதைப் பின்தள்ளினர் என்பதையும் தமிழர் சமயங்களையும் பின்தள்ளி பிராமண முறைகளையும் பரப்பினர். இதன் தாக்கம் இன்று ஐரோப்பி ஆசியநாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இருப்பதை உணர்க திருந்துக தமிழை மீட்குக. இனிவரலாற்றை மீண்டும் வாசிக்கவும்.....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படஆதாரங்களுடன் நாம்விளங்கிக் கொள்வதற்காக. எனவே நாகதீபம் என்பதை நைனாதீவு என்று எண்ணுவது தவறு. அது போர்ச் சூழலால் இடம்பெயர்ந்து சென்ற கோவில் அது பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக அண்மையில் இருந்த தமிழக அரசின் உதவிபெறப்பட்டது. அதற்காக அங்கிருந்து வந்தவர்கள் அங்கு குடியேறியு முள்ளனர். அதேபோன்று ஏனைய தீவுகளிலும் இந்தியக்குடியேற்றங்கள் நிகழ்திருக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறே வடமுனை பருத்தித்துறை வல்வெட்டித் துறையிலும் குடியேற்றங்கள் நிகழ்திருக்க இடமுண்டு. பூநகரி இராச்சியம் சிங்கை நகர் என்று வழங்கியமையும் அறிய இருக்கின்றது. அத்தோடு வன்னிப் பகுதியில் தமிழர்களின் பரம்பரிய கொற்றவை வழிபாடான முறையில் அம்மன் கோவில்கள் பிரபல்யமானவை பெரும்படை பொறிக்கடவை அம்மன் கிளிநொச்சி கனகாம்பிகை புளியம்பொக்கணை நாதம்பிரன் கோவில் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன்கோவில் இன்னும் குறிப்பிடப்படாத பல உள்ளன.

நாகர்களின் வாழ்வியல் பண்பாட்டை பிரதிபலிக்கும் நாகராசா நாகம்மா நாகமுத்து நாகையா போன்ற பெயர்கள் சான்று. அதே போன்றுதமிழர்களின் நற்காரியங்களில் தலைப்பாகை கட்டும் முறையானது நாகபடத்தைக் குறிப்பதாகும். அதே போன்று பெண்களுக்கும் நாகசடம் அணிகிறார்கள். ஆதாரம் இலங்கையம் அரசுகளும் என்ற குரும்பசிட்டி கனகரத்தினத்தின் வரலாற்று நுாலிலிருந்து இவை இன்றி விளக்கமின்றி மரட்டியர்களின் தொப்பியை அணிவதாலும் பெண்களிற்கு மெட்டாக்குப் போடுவதாலும் இந்திய மராட்டிய பண்பாட்டை விளக்கமின்றி ஏற்று உடுக்கின்றனர். அதே போன்றதே பஞ்சாபிகளின் பஞ்சாவி தமிழர்களின் பண்பாட்டு உடை என்று தமிழர்கள் எண்ணுவதும் தவறு. சாதாரண நேரங்களி அணிவது தவறல்ல தமிழ் உடையெ எண்ணி அணிதல் தவறு என்பதே கருத்து.அதே போன்று மராட்டியர்களின் சர்வாணியையும் கழுத்துத்துண்டையும் போட்டு தமிழ் உடுப்பு என்று நம்புகின்றார்கள்.

இது தமிழ் வியாபாரிகளின் பொறுப்பற்ற வர்த்தகத்தால் வரும் தமிப்பண்பாட்டுக் கேடுகளாகும். மணவறைகள் தமிழர்களின் திராவிடர்களின் என்ற பழைய முறைகளை விடுத்து வைசுணவ முறைகளை மணவறை சோடனைகாறர்கள் கிருச்சுணர் ராதை பொம்மைகளையும் வைத்து ஆரிய முறைகளைப்பரப்புகிறார்கள். தமிழைக் கெடுக்கிறார்கள். எனவே தமிழப்பண்பாட்டு முறையில் என்று தொடங்கி தமிழை விழுங்கி இந்திய மராட்டிய கலாச்சாரத்தில் போய் பரப்பம் கேவலத்தைக்கண்டு தமிழ் உலகம் அழுவது எவருக்கும் விளங்குவதில்லை.

பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர் சுவிசு(ஸ்)05.02கி.ஆ2012தமிழாண்டு2043