குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

இலங்கையில் ஊடக வியலாளர்களின் நிலைவரம் குறித்து கலைஞர் கருணாநிதி கவலை

21.01.தி.ஆ2044-04.02கி.ஆ2013 இலங்கையில் ஊடகவி யலாளர்களின் நிலைவரம் மிகவும் மோசமானதாக உள்ளதாக கலைஞர் கருணாநிதி  கூறியுள்ளார். இலங்கையில் பத்திரிகையாளர்கள் இணைந்து கறுப்பு சனவரியைக் கடந்த 29 ஆம் திகதி கடைப்பிடித்தமை தொடர்பாக கருணாநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர். காணாமல் போய் விடுகின்றனர். எனவே இந்தக் கொடூரமான நிகழ்வுகளை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக இலங்கை பத்திரிகையாளர்கள் 29 அன்று கறுப்பு சனவரியைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

பிரகீத் எக்னலி கொட என்ற அரசியல் விமர்சகர் 2010 ஜனவரி 24 அன்று காணாமல் போய் விட்டார். சண்டே லீடர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க என்பவர் 2009 ஆம் ஆண்டு சனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். சிரச என்னும் பத்திரிகை நிறுவனம் 2009 சனவரியில் தாக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டுசனவரி மாதம் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு யுலை மாதம் உதயன் எனும் தமிழ்ப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஞானசுந்தரம் என்பவர் தாக்கப்பட்டார். ராசபசசனாதிபதியான பிறகு ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஒரு பத்திரிகையாளர் காணாமல் போய்விட்டார். இலங்கையில் ராயபசஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகையாளர்களும் என்ன கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் கலைஞர் கருணாநிதி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.