குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

அன்னையின் நினைவுநாள் -திதி- தி.ஆ 2037-22.02கி.ஆ2006 இம்மாவின் நினைவாக கல்வட்டில் பதிவாக்கியவரிகள்.

அம்மாவே எனக்கு அகிலம்......

அம்மாவிடம் கற்றது  என் வாழ்க்கைக்கு  உதவுகிறது.  என்னை உயர்வாக்கியுள்ளது. ஆசிரியர்களிடம் கற்றது அறிவைத் தேடவைத்தது  தேர்வுகளில் சித்தியடையவைத்தது.

அம்மாவே எங்களை ஆரம்பக்கல்விக்காக பூநகரி ஞானிமடம் அ.த.க.பாடசாலையில் இணைத்தார். எங்களை என்பதன்பொருள் முருகதாசு(ஸ்) முருகவேள் இருவரும் நாங்கள் இரட்டையர்கள்.

 

உயர்கல்விக்காலத்தில் கைச்செலவிற்கு பணம் தருவார்.

 

1978 முதல் 1990 வரை வெளிநாட்டிற்கு வரும்வரையும்  கல்லுாரிக்கம் ஆசரிரியர் வேலைக்காக நான் செல்லம் போதெல்லாம் வழியனுப்ப வெளியே வந்து உச்சியில் முத்தம்மட்டுமா தருவார் சட்டைப்பையில் பணமும் வைத்தல்லா வழியனுப்பினார்.

 

அம்மா இறந்து கிடந்த காட்சி என்மனதில் இல்லை. இறுதியாக  இலங்கைசர்வதெச  கட்டுநாயக்கா விண்ணுந்து நிலையத்தில் ஐயாவடன் அருகே நின்று பற்கள் இல்லாத வாயால் புன்னகைத்து கையசைத்து  வழியனுப்பிவைத்த காட்சி கண்களிலும் மனதிலும் ஆழமாகப் பதிந்து நிற்கிறது.

 

விண்ணுந்து வேகமாக ஓடுகிறது....

என் மனம் ஆழமாய் தாய்நாட்டின் பாசத்தில் மூழ்கிறது. வீட்டுச்சூழல் கோவில்கள் கோவில்விழாக்கள் பொங்கல்கள் மடைகள் முத்தரிசிப்பந்தர்கள் திருவிழாக்கள் ஊர்க்கொண்டாட்டங்கள் போராட்டத்தில் இணைந்து இழக்கப்பட்டநண்பர்களின் நினைவுகள் கையில் ஒரு நண்பனின் பெயரில் கணையாழி மனப்பையோ பல நினைவுகளை எடுத்து எடுத்த  அடுக்கியது அப்போ விண்ணுந்து  விண்ணில் பறக்கிறது.

 

இருக்கை கட்டை அவிழ்த்துவிட்டு  எழுந்து நின்று ஆரம்பபாடசாலையையும் மகாவித்தியாலையத்தையும் யாழ். இந்துக்கல்லாரியையும்  எனக்கு கற்பித்த பொக்கு வாத்தியாரிலிருந்து சொக்கன் ஆசிரியர்வரை எண்ணினேன். அசைபோட்டேன். யாழ் இந்துவில் கல்லுாரிப் பண் பாடினேன். நாட்டின் தேசியப்பண்பாடினேன். நமோ நமோ தாயே..... இது கா.துறைக்குழு (பொலிசு படைபயில் குழுவில்) இருந்தகாலத்தில் இருமொழிகளிலம் படித்தவை.

 

சிந்தனைகள் விரிந்தன மனச்சிறகுகள் அடித்தன. சிறுவயதுச் சிறுவனாக விண்ணில் பறந்தேன்....

 

சிறுவனாக நான் இருக்கம்போதே உளவியல் தெரிந்தவள்போல் செயற்பட்டார்.  எனக்க ஏற்ற மாதிரியும் தம்பிக்க ஏற்ற மாதிரியும்  எல்லாவற்றையம் செய்தார். எண்ணெய்வைத்தல் குளிக்கவாத்தல்  எமக்க ஏற்ற ஏற்ற உணவுகள்  தயாரித்து தருதல் பழக்கங்கள் பழக்குதல்

 

காலையில் கட்டாயம் படி  கடவுளை வணங்கு கடவுளுக்கு விளக்கு வை மலர் எடுத்து அருகே உள்ள முருகன் கோவிலுக்கு கொடுங்கள். ஐயருக்கு உதவிகள் செய்யுங்கள் திருமுழுக்கு திரவியங்கள் அரைத்துக் கொடுங்கள். வெள்ளிக்கிழமை தொறும் திருத்தொண்டுகள் செய்யப்பற்றுவித்தார். மாலைவேளைகளில் அருகே உள்ள முருகன் கோவில் உள்ள சட்டவிளக்கும் வெளி மண்டப விளக்கம் கொழுத்த என்ற பணிப்பார்.

 

வீடு வளவு மரங்கள் மலர்ச்செடிகள் கால்நடைகள் பராமரித்தல் வித்துநாள் செய்தல் பதிரெடுத்தல் புதிர்குழைத்தல் விவசாயவேலைகள் வேலைசெய்வோரோடு பழகுதல் போன்றவற்றை  அறியப்படுத்தினார். அவை சுவிசுநாட்டிலும் எனக்கு உதவியது.

 

கிரந்தியெண்ணையை பிள்ளைகளுக்கு வைக்க எல்லா அம்மாக்களுக்கும் தெரியும் ஆனால் எங்கள் அம்மாவிற்கு மட்டுமே கிரந்தியெண்ணையையம் காச்சி வடித்தெடுக்கத் தெரியும். காரணம் ஐயாவுடன் இவற்றைச் செய்யம் வேலையாட்களுடன் உதவிய பட்டறிவுதான் அவை.

 

திருவள்ளுவரின் வரிகள் கற்றாரோ எமக்கு தெரியாது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு அற்ந்திருந்தாரோ எனக்குத்தெரியாது.

 

இல்லறத்திற்கு இவர்களால் சொல்லப்பட்டவை என்தாயிடம் அதிகமாக இருந்தது.

 

கணவனைக் கடவுளாக மதித்தல் அவருக்கு ஏற்பசெயற்படல் சுவையான உணவுகள் ஆக்கிப் பரிமாறல் வீட்டிற்கு வருவோரை உபசரித்தல் விருந்தோம்புவது காரைக்கால் புராணம் படித்தபோது அம்மாவையே காரைக்கால் அம்மையாராகப் பார்த்தென்.திருவள்ளுவரின் விருந்தோம்பல் படித்தபோத அம்மாவின் பழக்கங்களே அவையெனப் புரிந்தது. இன்றைய விரைவான வியாபார உலகில் தமிழர்களின் வெளிநாட்டு வாழ்வில் இல்லறப் பண்புகள் பமறக்கப்படுகின்றன.விருந்தோம்பல் பண்புகள் அற்றே போய்விட்டது. விருந்தோம்பல் இல்லாப் பெண்ணும் பெண் அல்ல வீடும் வீ அல்ல.

 

பிச்சைக்காரர் முதல் சன்னியாசிகள் சாமிகள்  வேலை செய்வோர் குடிமக்களுக்கு உணவு கொடுத்து நிறைவு கண்டவர் என் அம்மா.

 

சிரமங்கள் இருந்தாலும் நோயாளர்களைச்  சென்று பார்த்தல் உப்பிட்டாரை  உள்ளவரை நினை. கண்ணீரும் கடன் என்று வாழ்ந்தவர் துார இடங்களுக்கம் இழப்பு வீகளுக்கம் சென்றுவந்தார். அதனை முக்கிய கடமையாகக் கொண்டிருந்தார்.

 

பாற்பசுக்களைப் பராமரித்தல் பாலெடுக்கம் போது சுத்தம் பேணல்  உமிச்சூட்டில் பால் காச்சல். உறைபோட்டு தயிராக்கல் மத்தால் மோர்கடைதல் நெய்யெடுத்தல் சுத்தமாகப் பேணல் இவை அம்மாவின்  தனியான சிறப்புக்கள்.

 

சுகாதார நலத்திட்ட திணைக்களம்  அரசால்  பால் வழங்கும் திட்டத்தையே   அம்மாவிடம் ஒப்படைக்க காரணம் அம்மாவின்  துப்பரவுப்பழக்கங்களும் நேர்மையான கமையுணர்வும் கண்ணியமானகுணங்களும்தான்.

 

அம்மாவின் உணவுகளின் சுவைகளை நாக்குகள் உச்சரிக்கின்றன உணர்கின்றன. அம்மாவின்  உணவுகளின் சுவைகளை அறிந்ததால் அவரகளோடு இணைந்து உதவிகள் புரிந்ததால்  சுவைத்ததால். ஒடியல்கூழ் முதல் பல உணவு வகைகளை இங்கம் எம்மால் ஆக்க முடிகிறது.

 

சிறுவயதில் எமது கால்களில் ஏற்படும் காயங்களுக்கு மருந்து கட்டுதல் ஒத்தணங்கள் பிடித்தல் அம்மாவின் அம்மாவின் சிறப்பான பணிகளில் ஒன்று.

 

அந்த மென்மையான நினைவுகளில் சுவையான வரிகள் வருகின்றன...

 

பள்ளியிலே படித்தவிட்ட வீதியிலே விளையாடி வரம்போதினிலே

கால்களில் கல்பட்டு வரும் காயங்களையும் நோக்களையும்

அன்னையவள் அறிந்து

அத்தனை வேலைகளும் முடித்து விட்டு

கல்லில் கால்பட்டு வந்த காயத்திற்கு

சோறும்  நல்லெண்ணையும்

தேசிக்காய்ப்பிளித்துண்டுகளும்

மஞ்சள் மாவும் சிறிது உப்புமிட்டு

இளம்சூட்டில் இறக்கிப் பொட்டளமும் கட்டி

ஒத்தணமும் பிடிப்பாள் அம்மா!

துாங்கித் துாங்கித்ப் பிடிப்பதனால்

அம்மா துாங்கிவிட்டால்  சூட்டால் நான் விழிப்பேன்.

அதையுணர்நது அன்னைவிழித்திடுவாள்.

விட்டு விட்டு எடுத்து தொட்டு தொட்டு

பொட்டளம் தடவும் போதினிலே

ஓ உலகினிலே அதுதானே சொர்க்கம்.

என்ன இதம்! என்ன சுகம்!

விண்ணுந்து தரையில் இறங்கியது

தாய்வீட்டின் உறவும்

தாய்நாட்டின் உறவும் அறுந்தது.

 

பொ.முருகவேள் இரட்டையரில் இளையவன்.