குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பிரபாகரனின் கனவை நனவாக்கவே அமெரிக்க முயற்சி - குணதாச அமரசேகர.யெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்?

08.01.தி.ஆ2044-21.01.கி.ஆ2013  புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவை நனவாக்கும் நோக்குடனேயே அமெரிக்கா தனது மூவர் அடங்கிய 'திரிசூலக் குழுவை' இலங்கைக்கு அனுப்புகிறது. இதனை யெனிவா இராயதந்திரச் சமருக்கு அமெரிக்கா விடுக்கும் அறை கூவலாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

இவ்வாறு தெரிவித்துள்ளது கடும் போக்குடைய சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய இராயதந்திரக் குழுவின் இலங்கைப் பயணம் குறித்து கருத்து வெளியிடும்போதே தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவருமான கலாநிதி குணதாச அமர சேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமெரிக்கா தற்போது நாளாந்தம் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. அனைத்துவித உள்விவகாரங்களிலும் அந்த நாடு மூக்கை நுழைக்கின்றது. உலக வல்லரசு என்ற நினைப்பில் ஆடும் அமெரிக்காவுக்கு நாம் ஒருபோதும் அடிபணியக்கூடாது.

அமெரிக்கா இல்லாவிட்டால் என்னஇ இலங்கைக்குப் பக்கபலமாகத் தற்போது சீனா இருக்கின்றது. எனவேஇ அரசு சீனாவுடனான தனது உறவுகளைப் பலப்படுத்த வேண்டும். சீனாவின் பக்கம் முழுமையாக சாய்வதை விட தற்போது வேறு வழியில்லை.

அதேவேளைஇ பிரபாகரனின் கனவை நனவாக்கும் நோக்கிலேயே அமெரிக்கா செயற்படுகின்றது. மார்ச் மாதம் நடைபெறும் யெனிவா மாநாட்டில் இலங்கையை இறுக்குவதற்கு அது முயற்சிக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

யெனிவா சமருக்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுப்பதற்கு மூவரடங்கிய இராஜதந்திரிகளை இலங்கைக்கு அனுப்புகிறது வெள்ளைமாளிகை நிர்வாகம் என்றார்.

நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு

21.01.கி.ஆ 2013  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையி;ல்லா தீர்மானம் தொடர்பில், நவனீதம்பிள்ளை கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் உள்விவகாரங்கள் தொடர்பில் தேவையற்ற வகையில் நவனீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் கேனுக செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

நவனீதம்பிள்ளையின் கருத்துக்கள் பக்கச்சார்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகள், கோட்பாடுகளை உதாசீனம் செய்யும் வகையில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு எதிரான விமர்சனங்ளை வெளியிட்டுள்ளதாக ஷேனுக செனவிரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யெனிவாவில் இலங்கைக்கு எதிரான மற்றொரு கண்டனத் தீர்மானம்?

யெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் பெரியளவிலான முன்னேற்றத்தைக் காண்பிக்காததன் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரிக்கப்பட வேண்டியவை என்று நல்லிணக்க ஆணைக்குழுவால், இனங்காணப்பட்ட குறிப்பிட்ட சில சம்பவங்களில், சனல் 4 காணொளி உள்ளிட்ட ஏழு அல்லது எட்டு சம்பவங்கள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் 35 வீதமான பரிந்துரைகள் மட்டுமே, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, வடக்கில் படைக்குறைப்பு, அரசியல் தீர்வு, தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவது உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பிரதானமான பரப்பு, இலங்கை அரசாங்கத்தினால், தொட்டுக் கூடப் பார்க்கப்படவில்லை என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

“அதைவிட புதிய பல விவகாரங்கள் உள்ளன. தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது என்பன யெனிவாவில் கேள்விக்குட்படுத்தப்படக் கூடிய விவகாரங்களாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.