குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

பீகார் கிராமங்களில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை அமைக்க முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் கோரிக்கை

24.12.2012 பீகார் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் கிராமங்களில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் அப்துல் கலாம் பேசியதாவது:-

அறிவியலின் மதிப்பை மக்களிடையே பெருமளவில் பரப்ப வேண்டும். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியலின் பங்களிப்பு இருப்பதை உணர வேண்டும். இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் மனதில் அறிவியல் என்றாலே இருக்கக்கூடிய ஒருவித பயத்தை போக்கும் வகையில், நாடு முழுவதும் அறிவியல் பொருட்காட்சி மற்றும் ஆய்வங்கள் அமைக்க வேண்டும். கிராமங்களில் நடமாடும் ஆய்வகங்கள் அமைக்கவேண்டும்.

எனக்கும் பீகாரும் நெருக்கமான தொடர்பு உண்டு. குறிப்பாக நிதிஷ்குமார் ரெயில்வே மந்திரியாக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களிடையே அமைதி மற்றும் செழுமையை வளர்ப்பதற்கும் அவர் பாடுபட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல்வர் நிதிச்குமார் பேசுகையில், மூடநம்பிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அறிவியல் உதவுகிறது என்றும், அறிவியல் பாடங்களை படிப்பதில் குழந்தைகள் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.