குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சிக்கல் நிறைந்தது சீனா உறவு, வரலாற்றுப்பூர்வமானது இந்தியா உறவு: அமெரிக்கா.சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க யப்பான் விருப்பம் .

அமெரிக்க இந்திய உறவானது வரலாறுபூர்வமானது.சீனா வுடனான அமெரிக்க உறவு சிக்கல் நிறைந்தது என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, அவுசுதிரேலியா சென்றிருந்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன், ஆசிய விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும்.

இந்தியா மற்றும் அவுசுதிரேலியா இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தியா அவுசுதிரேலியா இடையே இராணுவ கூட்டு பயிற்சி நடந்தால் அதை அமெரிக்கா வரவேற்கும் என இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க யப்பான் விருப்பம்

இந்தியா மற்றும் யப்பான் இடையே கனிம இறக்குமதி மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.

பிரதமர் மன்மோகன் சிங் தனது யப்பான் பயணத்தை இரத்து செய்துள்ள நிலையில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவில் யப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோசிரோ யெம்பா மற்றும் யப்பானுக்கான இந்திய தூதர் தீபா வாத்வா இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 4 ஆயிரம் தொன் கனிமங்கள் யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தற்போது இந்த கனிமங்கள் சீனாவிலிருந்து யப்பான் இறக்குமதி செய்து வருகிறது.

இதன்மூலம் சீனா இறக்குமதியை தவிர்த்து இந்தியாவுடன் உறவை நீட்டிக்க யப்பான் விரும்புகிறது.

மேலும் இந்த கனிமங்கள் மூலம் மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள், கைபிரிட் கார்கள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க முடியும்.

அடுத்ததாக, சமூக நல ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளிலும் தங்கி வேலைபார்த்து வரும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

சனநாயகம் மலர காந்திய வழியை பின்பற்றினேன்: ஆங் சான் சூச்சி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் எதிர்க்கட்சித்தலைவர் ஆங் சான் சூச்சி டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: எனது அறவழி போராட்டத்திற்கு தூண்டுதாலாக இருந்தவர் மகாத்மா காந்தி தான்.

எனது நாட்டில் சனநாயகம் மலர நான் நடத்திய இயக்கத்திற்கு காந்திய வழியைத்தான் பின்பற்றினேன் என்றார்.

பின்னர் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி பேசுகையில், மியான்மரில் ஜனநாயகம் தழைக்க சூச்சியின் போராட்டம் பாராட்டுதலுக்குரியது என்றார்.

புதுடெல்லி ராய்காட்டில் மகாத்மா காந்தி சமாதியில் மியான்மார் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூ கீ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.