இந்த மனித உரிமை அமைப்பின் பிரிவுக்கு இயக்குனராக இருக்கும் மேனோன் சிக் புலம் பெயர்ந்தோருக்கு உள்ள சிக்கலான நிலைமையை மாற்ற வேண்டும் என்றார்.
கடுமையான கொள்கைகள் அதன் இலக்குகளை அடைவதில்லை, நியாயமற்ற முறையில் அப்பாவி மக்களைத் தண்டிக்கவே இச்சட்டங்கள் உதவுகின்றன. இம்மக்கள் ஸ்விட்சர்லாந்துக்கு பிழைப்புத் தேடி வருகின்றனர். அவர்களை சட்டத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது என்று ஷிக் கூறினார்.
புலம்பெயர்ந்தோரிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அநியாயமாகத் தண்டிக்கக் கூடாது என்று அரசிடம் வலதுசாரிகளும் அரசு சாரா அமைப்புகளும் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இதன் விளைவாக அரசு சாரா அமைப்புகள் சில இணைந்து மத்தியக் கூட்டரசிடம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளின் பட்டியலை போன மாதம் அளித்தன. அத்துடன் அரசியல் கட்சிகளும் மாநில அதிகாரிகளும், பொதுமக்கள் பிரதிநிதிகளும் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையரும் கூடி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்த அமைப்புகள் அளித்த விதிமுறைப் பட்டியலில் ஒன்பது முன்மொழிவுகள் காணப்படுகின்றன. அவை அகதிகளாக வருவோருக்கான இலவசச் சட்ட அறிவுரைகளாக ஒளிவுமறைவின்றி நியாயமான சட்ட நடைமுறைகளாக உள்ளன.
புகலிடம் நாடி வருதல் என்பது சுற்றுலா வருவது கிடையாது. எனவே சிலருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது அறவே கூடாது. வருகின்ற அனைவரும் வாழவழியற்றவர்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும் என்றார் சுவிசு அகதிகள் குழுவின் சூசன் போல்சு.