குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

இன்று இரவு தாக்குதல் நடக்கலாம்: நடக்கவில்லை.

 

13-14.10.2012-துருக்கி, முதல் தடவையாக தமது போர் விண்ணுந்துகளை சிரியா நாட்டு எல்லையை தாக்குவதற்காக இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் உச்சக்கட்டத்தை அடைந்ததையே இது காட்டுகிறது. துருக்கி போர் விண்ணுந்துகள், சிரியா நாட்டு எல்லையில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடந்தலாம் என ஊகிக்கப்படுகிறது. துருக்கி-சிரியா எல்லையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள துருக்கி நகரம் அஸ்மாரின் மீது நேற்று மாலை சிரியா நாட்டு விண்ணுந்துப்படை வானுார்திகள்கள் தாக்குதல் நடத்தின. சிரியா ஹெலிகாப்டர்கள் துருக்கி எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்கே, துருக்கி விமானப்படை விண்ணுந்துகள் இன்று அனுப்பப்பட்டன என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இன்று மதியம் புறப்பட்டுச் சென்ற துருக்கி விண்ணுந்துகள் எந்த தாக்குதலிலும் ஈடுபடாமல் திரும்பி வந்துள்ளன. ஆனால், அவை சிரியா நாட்டு எல்லைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, சிரியா ராணுவத் தளங்கள் மீது வட்டமடித்துவிட்டு திரும்பின. சிரியா ராணுவத்திடம் விண்ணுந்து எதிர்ப்பு பீரங்கிகள் இருந்த போதிலும், அவர்களும் இந்த விமானங்களை சுடவில்லை.

இந்த ஆபரேசன் ஒரு ஆழம் பார்க்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது. இன்றிரவு சிரியா நாட்டு ராணுவத்தளங்கள் மீது துருக்கி விமானங்கள் தாக்கக்கூடும் என அங்காரா டி.வி. சேனல்கள் தற்போது அவசரச்செய்திகள். போட்ட வண்ணம் உள்ளன. அது மாத்திரம் நியமாக நடந்துவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி யுத்தம் நடப்பதை தவிர்ப்பது கடினமாகி விடும்!

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.