குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

06.10.2012- தமிழ்நாட்டுக்கு பெரும் மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது என்று கேட்டதற்கு வானிலை அதிகாரி பதில் அளித்தார்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில்தான் பெரும்பாலான மழையை பெறுவது உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில்தான் பெரும்மழை பெறுகிறது. தென்மேற்கு பருவமழைக்காலத்தில் குறைந்த மழைதான் கிடைக்கும்.

கடந்த வருடம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தென்மாவட்டங்களில் பொய்த்துவிட்டது. அணைகள்பகுதியிலும், அணைகளுக்கு தண்ணீர் வரக்கூடிய பகுதிகளிலும் மழைபோதிய அளவுக்கு பெய்யாததால் அணைகள் நிரம்பவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மத்திய பகுதிகளில் அதாவது திருச்சி, நாகை, கடலூர், விழுப்புரம் முதலிய மாவட்டங்களில் கடந்த வாரம் மழைபெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சற்று திருப்தி அடைந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக தென்மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழைபெய்யும். விவசாய வேலைகளை தொடங்கலாம் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

எப்போது தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும்? என்று சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி மய்ய அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியையொட்டி தொடங்கும். 20 ஆம் தேதிக்கு சற்று முன்னதாகவும் தொடங்கலாம் சற்று பின்னாலும் தொடங்கலாம். தென்மேற்கு பருவமழை முடிந்த மறுநாள், வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சொல்லலாம். எப்படியும் சராசரியாக பார்த்தால் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களாக வெயில் அடித்து வருகிறது. அதுவும் நெல்லை போன்ற இடங்களில் வெயில் அதிக காட்டத்துடன் கோடை போல அடிக்கிறது.

இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை அதிகாரி கூறியதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு மேகங்கள் திரளும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.