குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திரு. வா.மு.சே .திருவள்ளுவர் அவர்களின்-யாதும் ஊரே நுாலிற்காக அணிந்துரை

அன்றிலிருந்து இன்றுவரை பலவிதமான எழுத்துக்கள் அவற்றுள் தமது என்ற உணர்வடன் பலர் வாசிக்க சிலரே எழுதுகின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவராக யாதும் ஊரே என்ற நுாலை ஆக்கியிருக்கம் திரு.வா.மு.சே.திருவள்ளுவர் முதன்மையானவர் என்ற எனது உண்மையான உணர்வினைபதிவு செய்யவிரும்புகின்றேன்.

சங்ககாலத்தில் யாதும் ஊரே என்று புலவன் பாடினான். அதை அறிந்து கொள்ள  இந்த எழுத்தாளன் உலகநாடுகளுக்கு விண்ணுந்துகளில்  பறந்தான் சிற்றுந்து(மகிழுந்துகளில்) தொடருந்துகளில் பயணங்கள் செய்தான். இங்கிலாந்தது சுவிற்சர்லாந்து சேர்மனி பிரான்சு அமெரிக்கா கனடா ஆசியநாடுகள் பலவற்றிற்கு சென்று உணர்ந்து யாதும் ஊரே என்ற நுாலைத் தந்துள்ளார். அதில் உள்ள அனுபவங்களை  ஆவலுடன் பருகவேண்டிய நேரம் கூடிவந்திருப்பு மகிழ்ச்சியே!

 

இந்த நுாலைப்பற்றி  எழுத முதல் இந்தநுாலை ஆக்கிய ஆசரியரைப்பற்றி சிறிது எழுத விரும்புகின்றேன்.  வணக்கங்கள் பலபல அவரின்நாவிலிருந்து சிரிப்புடன் பெருகும். அவரின் தமிழ் பண்புமிக்கது அன்பு மிக்கது நட்பு மிக்கது அரவணைபபு மிக்கது இதனால் பல நாடுகளில் வாழும் இலங்கைத்தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தமிழர்களும் இவர்பால் மிகுந்த அன்புடன் இருக்கிறார்கள். இதைக்கட்டிக்காத்திட பன்னாட்டு தமிழுறவு மன்றம் ஒன்றையும் அமைத்திருக்கிறார். மலேசியா சிங்கப்பூர் போன்றநாடுகளிலும் பர்மாவிலும் மாநாடுகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி யிருக்கிறார். தந்தையார் திரு.பெரும்கவிக்கோ அவர்கள். அணு என்றால் இவர் அணுக்கதிர் வீச்சாகசெயற்படும் திறன்மிக்கவர். தமிழ்ப்பணி இதழ் பெரும் நற்பணியாகும்.

சுவிற்சர்லாந்திற்கு எமது இல்லத்திற்கு2006 இல் வருகைதந்தார். சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ண் வீதியெல்லாம் நடந்தார் இரசித்தார். பலவற்றை அறிந்தார். ஈழத்தமிழர் நடத்திய போராட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டார். அதனால் மனதில் ஆறுதல்கொண்டார். சுவிற்சர்லாந்தின் இயற்கை அழகையும் குகைப்பாதை அழகையும் கண்ணுற்றார். சுவிற்சர்லாந்து நாடாளுமன்றத்தையே பல முறைசுற்றிப்பார்த்தார் தொட்டுப்பார்த்தார் என்றளவுக்கு சொல்லலாம். முன்பாக நின்று படங்கள் எடுத்துக்கொண்டார்.

அமெரிக்கா சென்ற அவர் வெள்ளை மாளிகைவரை சென்றார் பார்வையிட்டார் சகோதர் மனைவி பிள்ளைகளைக் கண்டுமகிழ்ந்தார். கனடாவின் நயகரா நீர் வீழ்ச்சியைப்பார்த்தார் கவிதைதந்தார். அமெரிக்க மக்களின் கனடா நாட்டுமக்களின் ஐரோப்பிய நாட்டுமக்களின் ஆசியநாடுகள் பலவற்றிலும்  வாழும் மக்களின் பண்புகளை அறிந்துகொண்டார் ஈழத்தமிழர்களின் வானொலிக் கலந்துரையாடல்களில் பங்குகொண்டார். இங்கிலாந்து நாட்டில் இயங்கும் தீபம் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வில் பங்கு கொண்டார். சுவிற்சர்லாந்தில் தமிழ்மக்களின் பல கொண்டாட்டங்களில் பங்குகொண்டார். எனவே யாதும் ஊரே என்றநுால் வெள்ளைமாளிகையை விட மகிமையானது. கனடாநயகராநீர்வீழச்சியைவிட  பரந்தது.  எழுதும் குடும்பத்தவரான கவிஞரான இந்த எழுத்தாளரான திரு. வ.மு.சே.திரு.திருவள்ளுவர் அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.


பூநகரி.பொ.முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து.
உ.த.ப.இயக்கம் சுவிற்சர்லாந்து-பேர்ண் வள்ளுவன் பாடசாலை.முதல்வரும் ஆசிரியரும்.28.09.கி.ஆ2012தி.ஆ2043