குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

புத்தர் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திற்கு இலங்கை சனாதிபதி ராயபச அடிக்கல் நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என்று தமிழக பாரதீயயனதா தலைவர் பொன்.ராதாகி

23.09.2012-தமிழக பாரதீய யனதா தலைவர் பொன்.ராதாகிருச்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள புத்த மத பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இலங்கை யனாதிபதி ராயபச மற்றும் பூடான் பிரதமர் யிக்மே யோசர் தின்லே ஆகியோர் வர மத்திய அரசு அனுமதி அளித்தது.

அடிக்கல் நாட்டு விழாவில் ராயபச பேசிய பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்று அமைந்துள்ளன. தம் சொந்த நாட்டின் மக்கள் மீதே வஞ்சம் நிறைந்த நெஞ்சும், விரோதமனப்பாவமும், மதங்கள் மீதான வெறுப்பும் கொண்டு தன் இராணுவத்தை வைத்தே தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பெரும் அழிவை ஏற்படுத்தி நம் தமிழ் சமுதாயத்தை கருவறுத்த இலங்கை சனாதிபதி கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சகிப்புத்தன்மை முக்கியமானது என்று பேசி உள்ளார்.

உலக மக்களுக்கு அகிம்சையை போதித்த புத்த பிரானின் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்துக்கு தமிழனின் ரத்தக்கறை படிந்த பாழ்க்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, புத்தருக்கே அவமானம்.

அகிம்சா மூர்த்தியான காந்தியியின் பெயரைக் கூட உச்சரிக்க அருகதையற்ற ராயபசஅகிம்சை, அமைதி பரப்பவேண்டிய கடமை பற்றி பறைசாற்றியுள்ளார். இலங்கை தமிழரின் அறிவுசார் முன்னேற்றத்தை தாங்க முடியாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்ட அவர் இந்திய நாட்டுக்கு போதனை வழங்கி இருப்பது நம் நாட்டிற்கே கலங்கத்தை விளைவிக்கும்.

உலக நாடுகளால் போர் குற்றவாளியாக கருதப்படும் ராயபச, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டு, 20-20 கிரிக்கெட் போன்ற அலங்கார விழாவுக்காக மட்டும் அழைக்கும் அசிங்கத்தை, இனிவரும் காலத்தில் எக்காரணம் கொண்டும் அரங்கேற்றக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.