குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய இராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற விவகாரம்; விசாரணைக்கு இலங்கை வருகிறது கியூ பிரிவு கா.து

21 .09.2012 இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய இறுவட்டுடன் இலங்கை வர முயன்ற தஞ்சை இளைஞனுடன் தொடர்புடையதான சந்தேகநபர்களை விசாரணை செய்வதற்காக இந்திய உளவுப் பிரிவு பொலிஸார் (கியூ பிரிவு) இலங்கை வரவுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தஞ்சையை சேர்ந்த மேற்படி இளைஞன், பாகிசுதானின் உளவாளியாக செயல்பட்டு வருவதாகவும், இந்திய இராணுவ ரகசியங்களை பணத்திற்காக விற்க இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விளைஞன் இலங்கைக்கு வரவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய இறுவட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவ்விளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தென்னிந்தியாவில் உள்ள முக்கிய இராணுவ பயிற்சி மையங்கள், அணுமின் நிலையங்கள், கடற்படை தளங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை படம் பிடித்து அவற்றை இலங்கையில் உள்ள ஐ.எஸ்.ஐ. அமைப்பின் பொறுப்பாளர் பாஸ் என்கிற அமீர் மூலமாக பாகிசுதானுக்கு அனுப்பி வந்துள்ளது தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து அவ்விளைஞனின் கடவுச்சீட்டு, வீடியோ புகைப்படங்கள், பென்டிரைவ் ஆகியவற்றையும் கா.து கைப்பற்றியுள்ளனர்.

 

இந்நிலையில், மேற்படி நடவடிக்கையில் தொடர்புடைய சந்தேகநபரிடம் விசாரணை நடத்துவதற்காக கியூ பிரிவு கா.துறையினர்  இலங்கை வர திட்டமிட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. (நக்கீரன்)

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.