குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்சுட்ராங்

 

30.08.2012-நிலவில் முதன் முறையாக கால்வைத்த நீல் ஆம்சுட்ராங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.

 

நிலவுக்கு முதன் முதலாக சென்று பூமிக்கு திரும்பிய பின் நீல் ஆம்சுட்ராங் பல்வேறு நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.

 

அப்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார்.

 

இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் ஆம்ஸ்ட்ராங், நிலவில் இறங்கிய போது அதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, இந்திராகாந்தி தூங்காமல் விழித்திருந்ததாக அவர் அமைச்சரவையில் இருந்த நட்வர்சிங் தெரிவித்தார்.

 

இதை கேட்ட ஆம்ஸ்ட்ராங், என்னால் உங்களது தூக்கம் கெட்டு விட்டது. இதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்.

 

அடுத்த முறை நிலவுக்கு செல்லக்கூடிய வாய்ப்பிருந்தால் காலம் தாழ்ந்து செல்கிறேன் என தெரிவித்தார்.

 

ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் நட்வர்சிங் இத்தகவலை தெரிவித்தார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.