குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சுண்டைக்காய் நாடு இலங்கை! விசயகாந்த் பேச்சு

23.08.2012-சுண்டைக்காய் நாடான இலங்கை, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது எ‌ன்று‌ம் இதைவிட இந்திய அரசு‌க்கு ஏற்பட்டு‌ள்ள வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை எ‌ன்று‌ம் தே.மு.தி.க தலைவர் விசயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரைத் துடைக்கவோ திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் வழி காணப்படவில்லை. இராமே‌ஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக் கதையாக உள்ளது. மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்றுவரை பலனில்லை.

 

தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அவரவர் இயல்புக்கும், அவரவர் சக்திக்கும் ஏற்றவாறு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.

 

ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் காதில் விழுந்ததாகவோ, அந்தப் பிரச்சனை பற்றிப் பேசவோ மத்திய அரசு முன்வரவில்லை. சுண்டைக்காய் நாடான இலங்கை இப்போது கூட, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை.

 

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும். மீனவர் நிலைமையை பிரதமரிடம் விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.