குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

பாறைகளை ஆராயும் ரோவர் கியூரியாசிட்டி விண்கலம்கியூரியாசிட்டி விண்கலத்தின் காற்றுமானி கருவி சேதம்

 

20.08.2012செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட, "ரோவர் கியூரியாசிட்டி" விண்கலம், "லேசர்" ஒளிகற்றைகள் மூலம் பாறைகள் குறித்த ஆராய்ச்சியை துவக்கியுள்ளது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது.

 

250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம் தயாரித்து அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தில் 6ம் திகதி தரையிறங்கியது. ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "க்யூரியாசிட்டி” என்ற, ரோபோ வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

 

முதல் கட்டமாக இந்த, "கியூரியாசிட்டி” செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை, ஸ்கேனர் கருவி மூலம் ஒளிகற்றைகளை ஊடுருவ செய்து, அந்த பாறைகளின் ரசாயன தன்மை உள்ளிட்டவற்றை ஆராயும் பணியை நேற்று துவங்கியது.

 

கியூரியாசிட்டியில் உள்ள, 10 உபகரணங்கள் பாறைகளின் ரசாயன தன்மை மூலக்கூறுகளின் வடிவம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து படம் பிடித்து பூமிக்கு அனுப்ப உள்ளன.

கியூரியாசிட்டி விண்கலத்தின் காற்றுமானி கருவி சேதம்

 

23.08.2012-செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது.

இந்த விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் “காலே கிரேடர்” என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது. அங்கிருந்து பாறைகள், மலைகள் உட்பட பல பகுதிகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

 

விரிவான ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் விண்ட்சென்சார் என்றழைக்கப்படும் காற்று மானி கருவியும் ஒன்று

 

இந்த கருவி செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் அளவை கண்டறிவதற்கா பொருத்தப்பட்டது. தற்போது இந்த கருவி சேதமடைந்துவிட்டது. இத்தகவலை கியூரியாசிட்டி விண்கலத்தை கண்காணித்து வரும் குழு தலைவர் ஜாவியர் கோமெஷ்-எல்விரா தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கூறுகையில், விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது அங்கு ஏற்பட்ட நில அதிர்வினால் பாறைகள் உடைந்து சிதறின.

 

இதன் காரணமாக விண்கலத்தில் உள்ள வயர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்திருக்கலாம்.

 

அதனால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. அதை சரி செய்து விடலாம். அதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.