குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தடைகள் பலவற்றைக் கண்டு வெற்றி கண்ட டெசோ மாநாடு அடுத்த கட்டப் பணிகளை செயல்படுத்த முனைவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

14.08.2012 சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் - ஈடுபடுவோம் என்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 12ஆம் தேதி (12.8.2012) ஞாயிறு அன்று காலை டெசோ அமைப்பின் (தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு) சார்பில் ஏற்பாடு செய்பயப்பட்டிருந்த ஆய்வரங்கம் திட்டமிட்டபடி காலை 10 மணியளவில் சென்னை தியாகராயர் நகர் ஓட்டல் அக்கார்டில் (ழடிவநட ஹஉஉடிசன)-ல் மிகவும் சிறப்பான முறையில் 3 மணி நேரத்திற்கு மேல் நல்லதோர் கலந்துரையாடலை உள்ளடக்கி, மாலை நடக்கவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களைப்பற்றி ஆழமாக விவாதித்து அருமையாக 14 தீர்மானங்களை வடித்தெடுத்தது.

 

ஆய்வரங்கம்

 

ஆய்வரங்கத்தின் தலைவராக டெசோவின் தலைவர் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று, நோக்கங்களை விளக்கியும், பற்பல உலக நாடுகள், பிற மாநிலங்களிலிருந்து வந்துள்ள பல தேசீயக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியவர்களை வரவேற்றும் சிறப்பான வகையில் கருத்தாழம் மிக்கதோர் உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். தி.மு.க.வின் நாடாளுமன்றக்  குழுத் தலைவர் மானமிகு டி.ஆர். பாலு அவர்கள் இணைப்புரைகளை அவ்வப்போது வழங்கினார்.

 

பல்வேறு ஆக்க பூர்வ யோசனைகளை ஆய்வரங்கம் ஏற்று 14 தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டன.

 

இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறும் பொறுப் பினை என்னிடம் அளித்ததிற்கேற்ப நன்றியுரையாற்றி, சுமார் 1.30 மணி அளவில் முடிவுற்று, அனைவருக்கும் மதிய விருந்து அங்கேயே அளிக்கப்பட்டது.

 

இம்மாநாடு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஊடகங் களை ஆக்கிரமித்து தமது விருப்பங்களை ஆசைகளை யெல்லாம் செய்திகளாகவும், செய்திக் கட்டுரைகளாகவும் திரித்து எழுதும் ஊடகத் துறையான இராமன் அணி (வீடணன் அனுமார்கள் சுக்ரீவன்கள் இதில் அடக்கம் ஆகும்) இந்த மாநாடு நடக்கவே நடக்காது; அவர் வர மாட்டார், இவர் வர மாட்டார் என்றெல்லாம் கதை யளந்தே கயிறு திரிக்கும் பணிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகச் செய்தே வந்தது.

 

மாநாட்டைத் தடை செய்ய முயற்சி

 

மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பு அ.தி.மு.க. அரசில் சென்னை மாநகராட்சிக்கான வழக்குரைஞராக  இருந்த ஒரு நபர் மூலம் பொது நல வழக்குப் போடப்பட்டு மாநாட்டை தடை செய்ய வேண்டுமென்று பிரார்த் தித்துக் கொண்டனர்.

 

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் அவர்களும் அதனை ஆதரித்து, மாநாட்டிற்கு அனுமதி அளிக்கக் கூடாது; லட்சம் பேருக்கு மேல் வர இருக்கின்றனர். மருத்துவமனை பக்கத்தில் உள்ளது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றெல்லாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு மூத்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன் வாதாடினார். அனுமதிகேட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன், சரவணன் போன்றவர்கள் வாதாடினர்.

 

இறுதியில் நீதிபதிகள் இடைக்கால ஆணையாக சென்னை நகர காவல்துறை ஆணையர் பல்வேறு சூழ்நிலைகளை  ஆய்வு செய்து இம்மாநாட் டிற்கான அனுமதி தருவதுபற்றி முடிவு எடுக்கலாம்; காவல்துறையின் அதிகார உரிமையை இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றனர்.

 

இரவு 2 மணிக்கு முடிவு செய்து  காலை 4.30 மணிக்கு மாநாட் டிற்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்  நடத்த அனுமதி இல்லை; தடை என்றெல்லாம் ஏதேதோ விசித்திர காரணங் களை உள்ளடக்கி (11 காரணங் கள்!) அனுமதி மறுப்பு ஆணை யினை வழங்கினர். புதிய நீதிபதி அவசர வழக் காக எடுத்துக் கொள்ள திமுக சார்பில் கோரியதன் அடிப் படையில் தலைமை  நீதிபதி ஆணை பிறப்பித்தார். அந்த நீதிபதி சில சட்டப் பிரச்சினைகளை விவாதித்து, தம்மால்  வழக்கை எடுத்துக் கொண்டு ஆணை பிறப்பிக்க இயலாது என்று கூறி ஆணை பிறப்பிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

 

டெசோவின் தலைவரும் தடைக் கற்கள் உண்டடென் றாலும் தாங்கும் தடந்தோள்கள் உண்டு என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளை நினைவூட்டி, மாநாடு எப்படியும் நடந்தே தீரும் என்று செய்தியாளர் கேட்ட கேள்வி களுக்குப் பதில் கூறினர்.

 

(11.8.2012) சனி இரவு விடுத்த அறிக்கையில் நாளை மாலை மாநாடு அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெறும். தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 20 முதல் 30 வரை  நடைபெறும் என்று அறிவித்தார்.

 

மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இல்லத்தில் அவசர வழக்காக மேற்கொண்டு விசாரணை நடத்திடக் கோரி தி.மு.க. வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, ஞாயிறு காலை 11 மணிக்கு ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகளின் அமர்வே விசாரித்து ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.

 

தடைக்குத் தடை!

 

ஆய்வரங்கம் திட்டமிட்டபடி துவங்கி நடந்தது; அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்திலும் நடந்திட ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. அமர்வு நீதிபதிகள் இருவரும் அரசு வழக்குரைஞரின் வாதத்தை ஏற்காது, தடை ஆணையை ரத்து செய்து, குறிப்பிட்ட இடத்திலேயே நடத்திக் கொள்ளலாம் - சில நிபந் தனைகளுக்கு உட்பட்டு என்று ஞாயிறு பிற்பகல் 1 மணியளவில் தீர்ப்புத் தந்தனர்.

 

ஆய்வரங்கத்திற்கு இச்செய்தி 1.30 மணிக்குக் கிடைத்தது - மாநாடு ஏற்கெனவே அறிவித்த இடத்திலே (ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்) முன்பே விளம்பரப்படுத்திய படியே கட்டுப்பாட்டுடன் நடைபெறும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது.

 

அதுபோலவே கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் கட்டுப்பாடு காத்தது! கண்ணியம் பொங்க கடமையாற்றி வரலாறு படைத்தது. ஆனால் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய செய்தி என்னவென்றால், அவ்வளவு பெரும் மக்கள் கூடும் இடத்தில் காவல்துறையினர் தலைகளை தேடித் தேடிப் பார்க்க வேண்டியிருந்தது. (அதுவும் ஒரு வகையில் இந்த மக்கள் கூட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு காவல்துறையினர் தேவையில்லை என்று நினைத்து கடமையாற்றத் தவறினர் போலும்!)

 

வெளிநாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் (VVIP) வந்து செல்லும் ஒரு மாபெரும் சர்வதேச ரீதியான மாநாட்டிற்கு காவலர் தம் கடமையைச் செய்ய வேண்டியது இன்றிய மையாதது அல்லவா?

 

இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகள்

 

இப்படியா இராஜாவை மிஞ்சும் இராஜவிசுவா சத்தைக் காட்டுவது? வழக்கு நீதிமன்றங்களில் நீண்டு கொண்டே  இருக்கும்போதுகூட காவல்துறை மாநாட்டு விளம்பரப் பேனர்களையெல்லாம் அகற்றும் பணிகளை வேகமாகச் செய்ததே, ஒரு வகையில் நீதிமன்ற அவ மதிப்புக் குற்றம் ஆகாதா எனும் நெறியைக்கூட எண்ணிடவில்லை அவர்கள்!

 

ஆனால் இவைதான் மாநாட்டிற்கு நல்ல பரபரப்பு விளம்பரம் தேடித் தந்தன!

 

வழமைக்கு மாறாக மாநாட்டிற்கு வர வேண்டாம்; அங்கிருந்தே கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி அலை வரிசைக் காட்சியைக் காணுங்கள் என்று மாநாட்டு வரவேற்புக் குழுத்  தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் இயக்கத் தோழர்களுக்கு கூறி, மக்களின் வருகையை  கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

 

இது ஒரு புதுமை அல்லவா? மாநாடு ஞாயிறு மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை மாநாட்டுத் தலைவர் கலைஞர் நிறைவுரையுடன் முடிந்தது. ஒரு சிறு சலசலப்பு, கூச்சல், குழப்பம் ஏதும் நடக்கவில்லை (இது சில பார்ப்பன ஊடகங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கக் கூடும்).

 

இரு நன்மைகள்!

 

தமிழக அரசு சார்பில் மாநாட்டுக்குத் தடை விதித்தது இரு நன்மைகளை ஏற்படுத்தின.

 

1. இந்த மாநாடு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவணப் பதிவுகளில் விரிவாக இடம் பெற்ற அருமையான வாய்ப்பை அதிமுக அரசு ஏற்படுத்தியது.

(உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மாநாட்டைத் தடை செய்ய மேற்கொண்ட முயற்சிக்கும் மாநாட்டின் சார்பில் நமது நன்றி!)

 

2. ஈழத் தமிழர்களுக்காக, கண்ணீர் விடுபவர்களில் ஒப்பனைக் கண்ணீர் - நீலிக் கண்ணீர் எது? உண்மைக் கண்ணீர் எது? என்பது உலகத்தாருக்குப் புரிய வைத்து விட்டது. தெளிவுள்ளோர் தெரிந்து கொண்டு விடுவதற்கு அரிய வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது! வந்த அத்துணை உலக நாடுகளின் பிரதிநிதிகள்   தேசியக் கட்சிகளான தேசீய மாநாட்டுக் கட்சி (N.C) காஷ்மீர் பரூக் அப்துல்லா தலைமையில் இயங்கும் கட்சி,  சரத் பவாரின் தேசீயவாதக் கட்சி (N.C.P.) (மகாராஷ் டிராவினை தலைமையிடமாகக் கொண்டது).  இராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் லோக் ஜனசக்தி கட்சி (பீகார்) இப்படி பலரும், வெளிநாட்டினரும் இலங்கை அரசின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது கலந்து கொண்ட சிங்கள இனத் தலைவர் மனிதநேயர் நவ சம சமாஜ கட்சி எம்.பி. விக்ரம பாஹு கருண ரத்னே, ஆம்நெஸ்டி இண்டர்நேஷனல் சார்பில் கலந்துகொண்ட ஆனந்த் குருசாமி, நைஜிரியா, துருக்கி, மொராக்கோ, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா முதலிய பற்பல நாடுகளின் பேராளர்களுக்கு நமது ஆழ்ந்த நன்றி உரியதாகும். 89 வயதிலும்கூட தொடர் தொல்லைகளைத் தாங்கி, இறுதி வெற்றிதான் முக்கியம் எனும் தன்மையில் மனம் தளராது முயற்சித்து வெற்றி கண்ட மானமிகு கலைஞர் அவர்களுக்கு நன்றி! நன்றி!!

 

ஆக்கபூர்வமான தீர்மானங்கள் உலக அரங்கில் அய்.நா. முதல் பற்பல நாடுகள், ஜன சமூக அமைப்புகள், இந்திய அரசின் செயல்பாட்டை விரைவுபடுத்திடும் பணிகளை எல்லாம் இனி செய்ய வேண்டும்.

 

ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டாலும்கூட தனித் தலைமையோடும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாடுபட உறுதியோடு முயற்சிக்க வேண்டும். வீண் விமர்சனங்களில் பொது எதிரியான ஹிட்லரிசத்தின் தர்பாரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள்ளாகியுள்ளவர்களை மீட்டெ டுத்து மான வாழ்வு, உரிமை வாழ்வு வாழ வகை செய்ய வாரீர்! வாரீர்!!

 

அனைவருக்கும் நன்றி! நன்றி!!

 

சென்னை

14.8.2012

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

 

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.