குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும்: டெசோ ஆய்வரங்கில் கருணாநிதி

12.08.2012-சென்னை: இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று டெசோ மாநாட்டையொட்டி சென்னையில் நடைபெற்று வரும் ஆய்வரங்கில் திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்

சென்னை அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடக்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் விக்கிரமபாகு, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கனிமொழி எம்.பி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுள்ளனர்.

ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில், ஈழத் தமிழர்களுக்கு திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்ததையும் திமுக நடத்திய போராட்டங்களையும் தமது உரையில் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் ஆய்வரங்கில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.