குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பணம் உழைக்கத் தெரிந்தவர்கள் வாழத்தெரியாது பாழாகிப்போனது ஏனோவெளிநாடுகளில்.பொ.முருகவேள் ஆசிரியர் பூநகரி.

சிதறியதமிழன் பதறியபடி பலநாடுகளில் எதிலிகள் ஆனான்

பழகாத பண்பாடுதெரியாத மொழிகள் சித்திரவதைசெய்யும் குளிர்

இத்தனைக்கும் பதில் சொலி பம்பரமாய்ச்சுழன்று நின்று

தனக்கென்று எண்ணாது எல்லாம் உறவுகளுக்காய் உலுப்பிக் கொட்டினான்

வெறும்மனிதனாய் வரும்பெண்ணை நேயமுடன் ஏற்றான்.

வந்தவளோ வெயிலுக்கு குடைபிடித்தாள் கறிக்கு பால்தேடினாள்

 

இத்தகைய எல்லாப்புதியவாழ்வில் பழையவனாய் மாப்பிள்ளையானான்

திருமணத்திற்காய் மத்தாய்சுத்தினான் நண்பர்களை நாணாக்கினான்

ஓட்டப்போட்டியிலல் ஓடிடியவனாய் ஒப்புக்கு மணவறையில் மாப்பிள்ளையானான்

பக்கத்துவீட்டார் அப்பாவாகினார் மாமாவாகினார் இரத்தம்பண்ணினார்

கன்னியாதானம்  செய்தார் .சீட்டுக்கூறிக்கொண்டே குருக்கள் மாங்கல்யம் தந்துநாமே என்றார்.

சீட்டைக்கூறிமுடித்துக்கொண்டு தாலிகட்டமூகூர்த்தம் இருக்கென்றார். பெறுங்கள் என்றார்.

மண்டபத்தில்  இருந்தஒருவர் வந்தார் தலப்பாகை கட்டிவிடு என்றார்.

உடைதேங்காயை என்றே உடைத்தார்.தாலிகாட்டினார் மாலைகள் மாற்றினார்.

 

குத்துக்கரணமடிப்பது போல் உழைத்து குடும்பங்களைஆளாக்கினார்.

குழந்தைகள் பெற்றார் முறையாக வளர்த்தார் சிலர் குறையாகவளர்த்தார்பலர்.

பண்பானகுழந்தைகளைப் படித்துப் பல்கலைக்கழகங்கள் செல்லவைத்தார்

பாவேந்தர்சொன்ன நல்லதொருகுடும்பம்பல்கலைக்கழகம் போலாக்கினார்.

சிலரோ பணத்திற்காய் பகட்டுக்காய் தமதுவாழ்வையும் பிள்ளைகள் வாழ்வையும்

பாழாக்கினார் நாடுகளைத்திட்டித்திரிகிறார். வெட்கப்படுகிறார் படிக்கத்தெரிந்தவர்கள்

பணம் உழைக்கத் தெரிந்தவர்கள் வாழத்தெரியாது பாழாகிப்போனது ஏனோவெளிநாடுகளில்.