குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சனாதிபதியாக பதவியேற்கிறார் பிரணாப் முகர்யி

 

10.08.2012-நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சனாதிபதி தேர்தல் கடந்த 19ம் திகதி நடந்தது. இத்தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

 

இதில் மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவானது. இவ்வாக்குகளுக்கான எண்ணிக்கை கடந்த 21ம் திகதியன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்யி அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில் வெற்றிக்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று பிரணாப் முகர்யி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மா 2 லட்சம் வாக்குகள் பெற்றார்.

மொத்தம் 776 எம்.பிக்களில் 28 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை. 15 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரணாப் முகர்யிக்கு ஆதரவாக 527 எம்.பிக்கள் வாக்களித்திருந்தனர். பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவாக 208 எம்.பிக்கள் வாக்களித்திருந்தனர்.

பிரணாப் முகர்யி வெற்றி பெற்றதையடுத்து நாடு முழுவதும் காங்கிரசு கட்சியினர் உற்சாக கொண்டாட்டத்தில் களமிறங்கினர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், திரிணமூல் காங்கிரசு தலைவர் மம்தா பானர்யி போன்ற முக்கிய தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரணாப் பேட்டி: தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பிரணாப் முகர்யி அளித்த பேட்டியில், நாட்டின் உயரிய பதவியில் என்னை அமர்த்தியதற்கு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, எனக்கு வாழ்த்து தெரிவித்த சங்மாவுக்கு நன்றியை தெரிவிக்கின்றேன், அவர் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.

இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும், நாட்டை ஆபத்திலிருந்து காக்கவும் கண்டிப்பாக முயற்சி செய்வேன். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன். நாட்டிற்கு நான் செய்ததை விட நாடு எனக்கு அதிகமாக செய்துள்ளது. அந்த நன்றியை மறக்காமல் செயற்படுவேன் என்றார்.

பதவியேற்பு: வருகின்ற 25ம் திகதி நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக, நாடாளுமன்ற அவையின் மைய அரங்கில் கட்சி உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையில், காலை 11.30 மணி அளவில் பிரணாப் முகர்யிக்கு இந்தியத் தலைமை நீதிபதி பதவி பிராமாணம் செய்து வைக்கின்றார்.

இந்திய சனாதிபதியாக பிரணாப் முகர்யி எதிர்வரும் 2017ம் ஆண்டு வரை  பதவி வகிப்பார்.

உலகப் பத்திரிக்கைகளின் புகழாரம்

அமெரிக்காவின் வால் சுடிரீட் சர்னல்: மிகவும் புத்திசாலித்தனமும், புத்தி கூர்மையும் படைத்தவர் 76 வயதான பிரணாப் முகர்யி.

காங்கிரசு கட்சியின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கியத் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்யி. பல ஆண்டுகளாக காங்கிரசு கூட்டணியை பிரிந்து போய் விடாமல் கட்டிக் காத்த முக்கியசுதராக திகழ்ந்தார் பிரணாப் என்று கூறியுள்ளது.

பிபிசி: காங்கிரசு கட்சியின் தொண்டுக் கிழவனார் பிரணாப் முகர்யி. பல்வேறு கூட்டணிகளை சிறப்பாக அமைக்க உதவியவர்.

2014 லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. அப்போது குடியரசுத் தலைவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையும் என்பதால் பிரணாபின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படவுள்ளன என்று கூறியுள்ளது.

மேலும் பிரணாபின் வெற்றி காங்கிரசுக்குத்தான் பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பாங்காக் போசுமிகுந்த இந்திய அரசியலில் பிரணாப் முகர்யியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும். அதற்கு அவரது நீண்ட கால அரசியல் அனுபவம் உதவி புரியும் என்று கூறியுள்ளது.

அவுதிரேலியன்: பொருளாதார ஏற்றத்தாழ்வு, நாடாளுமன்றத்தில் தொடரும் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், பிரணாப் முகர்யி, சற்று சிறப்பாக செயல்பட முனைவார் என்று கூறியுள்ளது.

மேலும் ஒரு படி போய், நாடாளுமன்றத்தில் தம்பிப்பு நிலை வரும்போது குடியரசுத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மல்லுக்கட்டும் கட்சிகளை அழைத்து அவர் பேசக் கூடும் என்றும் தி அவுசுதிரேலியன் கூறியுள்ளது.

இவ்வாறு பிரணாப் முகர்யியை உலக பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதி உள்ளன.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.