குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

டெசோ மாநாடு ஈழத்தமிழரின் வடுக்களுக்கு மருந்து போடவே - கருணாநிதி!

03.08.2012இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எதிர்வரும், 12ம் திகதி, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு ஆய்வரங்கம், எனது தலைமையில் தி.நகரில் நடைபெறவுள்ளது. ஆய்வரங்கத்தில் கருத்துகள் பரிமாற்றம் நடைபெறும்.

மாலையில் நடைபெறவுள்ள பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்முடைய கோரிக்கைகள், வேண்டுகோள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம், அந்த ஆய்வரங்கில் கலந்து பேசி தீர்மானிக்கப்படும்.

மாலை 4 மணிக்கு, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் பொது மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையில் தொடர்ந்து வாழ வழியில்லாமல், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குடியேறி, புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அகதிகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும்.

அங்கு அமைதியானதும், உரிமையுடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும், இந்த மாநாட்டின் ஆய்வரங்களில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

நம்மால் முடிந்த வரை, நம்முடைய குரல் இலங்கைத் தமிழர்களுக்காக ஒலிக்கும், ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள டொசோ மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனுசு்கோடிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் சீனாவின் உதவியுடன் இலங்கை தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முகாம்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன முறுகல் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கில் டொசோ அமைப்பு இயங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்களான ஷரத் பவார், பாரூக் அப்துல்லாஹ், ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரட் யாதவ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் டொசோ மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.