குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விசயகாந்த் ஆவேசம்

01.06.கி.ஆ2012-தமிழாண்டு2043-எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விசயகாந்த் தலைமை தாங்கி பேசியதாவது: 5 வருடத்துக்கு ஒரு முறை தான் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் மின்கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுபற்றி கேட்டால் நாங்கள் உயர்த்தவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளது என்கிறார்கள். மக்கள், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஓட்டு போட்டார்களா, அதிமுகவுக்கு ஓட்டு போட்டார்களா? சட்டமன்ற தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்கால் அதிமுக  வெற்றிபெற்றதாக கூறுகிறார்கள். 2004 மக்களவை தேர்தலிலும் யெயலலிதா 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

 

அப்போது 40 தொகுதிகளிலும் அதிமுக அணி தோற்றது. ஏன் அப்போது வெற்றிபெறமுடியவில்லை. சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பேசமுடியவில்லை. எந்த கேள்விக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. எல்லாவற்றுக்கும் 110 விதியின் கீழ் யெயலலிதாவே அறிக்கை படித்து விடுகிறார்.

 

எந்த அமைச்சரும் பதில்சொல்வதில்லை. மாறாக யெயலலிதா பேசும்போது அமைச்சர்கள் மேசையை மட்டும் தட்டுகிறார்கள். இவ்வாறு விசயகாந்த் பேசினார். கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.