குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கோவணம் கட்டிய விவசாயி அறிவிப்பு

27.05.2012-தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொளாநல்லி குட்டப்பாளையத்தில் தங்கவேல்(வயது 53) என்ற விவசாயி வசிக்கின்றார். 

இவர் இதுவரை 3 முறை மொடக்குறிச்சி சட்டசபை தேர்தலிலும் மற்றும் ஈரோடு-சேலம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு உள்ளார்.

இந்த தேர்தல்களில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கோவணம் கட்டியபடி மாட்டு வண்டியில் வந்த காரணத்தினால் “கோவணம் தங்கவேல்” என்று செல்லமாக அழைக்கப்படுகின்றார்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சனாதிபதி தேர்தலில் போட்டியிடபோவதாக கோவணம் தங்க வேல் கூறியுள்ளார்.

இதுபற்றி கோவணம் தங்கவேல் கூறியதாவது: 2001ம் ஆண்டு நடந்த மொடக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்டேன். பிறகு 2006, 2011-ம் ஆண்டுகளில் நடந்த மொடக்குறிச்சி தேர்தலிலும் இதுபோல சென்று மனு தாக்கல் செய்தேன்.

மேலும் 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தொகுதிகளில் ஈரோடு-சேலம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். விரைவில் நடக்க உள்ள சனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் முடிவு செய்து உள்ளேன். இதற்காக வேட்பு மனு தாக்கல் தொடங்கும் முதல் நாளே நான் வேட்பு மனு தாக்கல் செய்வேன்.

உயர்ந்த எண்ணம் கொண்ட குடிமகன்: இந்திய நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும், இந்திய விவசாயி இந்தியாவில் உயர் பதவியில் அமரவேண்டும்.

பள்ளி-கல்லூரிகளில் விவசாயம் கட்டாய பாடமாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு நீர் வளமும், நில வளமும் தூய்மை குன்றாமல் கிடைக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டுள்ளார் கோவணம் தங்கவேல்.

சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.