குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அகத்தியர் - ஆரியம் புகுத்திய கற்பனை (2) முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

13.05-2012-தமிழ்நாட்டு அகத்தியர் வரலாறு களுடன் பிறநாட்டு அகத்தியர்களின் வரலாறுகளும் தமிழ் இலக்கியங்களில் கலந்து கிடக்கின்றன. கா.நமச்சிவாய முதலியார் அகத்தியர் என்று ஒருவர் இருந்ததில்லை என்று கூறியவர் ஆவார்.

அகத்தியர் கடலைக் குடித்தார் என்று கதை ஒன்று கூறப்படுகிறது. சுறாமீன் மண்டலத்திலுள்ள அகத்தியர் எனும் மீன மிதுன ராசியில் தோன்றுங் காலத்தில் கடல் நீர் ஆவியாக மாறுவதனால்கடல் வற்றுகிறதெனவும், அது மறையுங் காலத்தில் மழை பெய்வதால் கடலில் நீர் நிறைகிறது என்று பொருள் படும் பாடல் பரி பாடலில் உள்ளது.

 

பொதியின் முனிவன் புரைவரை கீறி மிதுனம் அடை  விரிகதிர் வேனில் எதிர் வப்பு மாரிஇயைகெற் இவ்பவாற்றார் புரைகெழுகையம் பொழி மழை தாழ

 

பேராசிரியர் ஓ.சி. கங்குலி என்பவர் இதனைத்தான் உருவகமாக அகத்தியர் கடலைக் குடித்தார் என்றும், மறு படியும் கடல் நீரை அவர் உமிழ்ந்து விட்டார் என்றும் புராணங்கள் கூறும் என்று கருத்துக் கூறுகிறார்.

 

அகத்தியர் என்ற பெயர் தமிழ் நாட்டில் வாள மீனுக்கு இட்டு வழங்கி உள்ளனர். எனவே அப்பெயர் தமிழ் நாட்டில் வெகு காலத்துக்கு மன் இருந்தே வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அகத்தியர் என்னும் பெயர் தமிழே என்றும், அது தமிழ் நாட்டில் முதன் முதல் வழங்கப்பட்டு வந்த பெயர் என்றும், அது கற்பனைப் பெயர் அல்ல என்றும் கூறுகிறார் துடிசை கிழார்.

 

ஆரியர் புகுத்திய கதை

 

பொதிய மலை அகத்தியர் என்கிற குறுமுனி ஒளியர் என்று கூறுகின்றனர். ஒளிநாட்டு வேளாளர் குலத்தவரான பரமேசுவரர் கயிலாயத்தை ஆண்டு வந்ததாகவும், ஆப்பிரிக்க நாட்டு நீக்ரோக்கள் தமிழ் நாட்டைக் கைப் பற்றியபோது, சேர, சோழ, பாண்டியர், பல்லவர் முதலானவர்களால் அவர் களை ஒழிக்க முடியவில்லையாம். இவர்களை வென்ற ஆப்பிரிக்கர் முப்புரத்தவர் எனப் பெயர் கொண்டு தமிழ்நாடுகளை ஆண்டார்களாம்.

 

எனவே தமிழ் அரசர்கள் கயிலை சென்று பரமேசுவரரிடம் முறை யிட்டனராம். அப்போது பரமேசு வரருக்கும், இமயமலை அரசன் மகள் உமை அம்மைக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால், திருமண நாள் அண்மையில் இருக்கவே, பரமேசுவரர் தனக்குச் சமமான அகத்தியரை அழைத்துப் பெரும்படையுடன் தெற்கே தமிழர் களுக்கு உதவிட அனுப்பினாராம். இவரைத்தான் அருணிகிரியார் திருப் புகழில், சிவனை நிகர் பொதியவரை முனிவன் எனக் குறிப்பிட்டாராம்.

 

முதல் முதல் அகத்தியர் தென்னாடு அகத்தியர் இவ்வாறு வந்தததற்கு அவர் ஒளிநாட்டு வேளாளர் பரம்பரை என்பதாலேயாம். அப்போது அகத்தியர் பரமேசுவரனைப் பார்த்து, விடைகொடு போவாள் ஒன்றை வேண்டினள். ஏகுந்தேயம் தொடை பெறு தமிழ் நாடென்று சொல்லும், அந்த நாட்டில் இடை பயின் மனித்த ரெல்லாம் இன்றி தமிழ் ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப, கேட்டார் கருத்தாம் உரைத்தல் வேண்டும் என்று கேட்க அகத்தியருக்குத் தமிழ் இலக் கணத்தை உபதேசித்து முத்தமிழிலும் வல்லவராக்கி அனுப்பி வைத்தார்.

 

அகத்தியர் படைகளுடன் வந்த போது முப்புரத்தவர் எனப்பட்ட ஆப்பிரிக்கர் அவரைத் தடுக்க முயலச் சண்டை நடைபெற்று அகத்தியர் வென்றார் எனவும் இந்நிகழ்ச் சியைத்தான் விந்தத்தை அடக்கினார் என்று கூறித் தமிழர் அகத்தியருக்கு விந்தம் அடக்கிய வித்தகர் எனப் பெயர் சூட்டினார்களாம். கதை இங்கே   முடிக்கவில்லை.

 

காசிக் காண்டத்தில் ஆரியரின் கற்பனை இங்கே விரிவடைகிறது. விந்தம் அடக்கிய வித்தகர் எனும் கதைக்கு மேலும் ஒரு கதையை காசிப காண்டம் சேர்த்தது.

 

விந்திய மலை இமயமலையோடு போட்டி போட்டு நீண்டு வளர்ந்து சூரியனையும் இயங்காமல் தடுத்த தாகவும், அகத்தியர் விந்தத்தைப் பாதத்தில் அழுத்தியதாகவும் கூறுகிறார். ஆரியர்கள் எழுதிய இந்தக் கதை அதிவீரராம பாண்டியன் காசி காண்டத்தில் உள்ளது.

 

அகத்தியர் விந்தத்தை அடக்கித் தெற்கு நோக்கி வருகையில் கிரவுஞ்ச மலை அரசனோடு போரிட்டு வெற்றி பெற்றுப் பொதிய மலையை அடைந் தாராம். பொதிய மலையில் ஆப்பிரிக் கர்களை விரட்டி அடித்துத் தமிழ் நாட்டை ஆண்டாராம். பொதிய மலைக்குத் தெற்கே சென்று ஆப்பிரிக்கர்களை எதிர்க்க இந்தச் சூராதி சூரர் அகத்தியருக்கு முடியவில்லையாம்.

பரமேசுவரர் திருமணம் முடிந்து அவரே பெரும் படையுடன் வந்து திருவேற்காட்டில் அகத்தியரைச் சந்தித்து கூவம் சென்று போருக்கு வேண்டியவற்றைச் சேகரித்து அச்சிறுபாக்கம் செல்ல, அங்கே தேரின் அச்சு முறிய, அதைச் சரிப்படுத்திக் கொண்டு திருவதிகையை அடைந்து முப்புரத்தவர்களான ஆப்பிரிக்கர்களை எதிர்த்து அவர் களுடைய மூன்று கோட்டைகளை அழித்துத் தமிழகத்தை மீட்டு மகேந்திர மலையை அரச இருக்கையாக்கித் தமிழ்நாட்டை ஆண்டு வந்தாராம் அகத்தியர். நாட்டில் அமைதி ஏற்பட்டதும் பொதிய மலை வந்து தமிழை வளப்படுத்தத் தாம் ஓர் இலக்கண நூலை அகத்தியம் எனும் பெயரால் உருவாக்கித் தமிழ் போதித்து வந்தார்.

 

திருமூலர் அகத்தியர் பரமேசு வரனால் தென்னகம் அனுப்பப்பட்டார் என்ற கதையை நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து

 

கெடுகின்றது எம்பொருமான் என, ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீ போய்

முடுகியவையத்து முன்னி சென்றனனே

என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தத் திருமூலர் வரிக்கு ஒரு கதையை நம்ப முடியாத மூடக் கற்பனையை உருவாக்கிவிட்டனர். அதற்குத் தமிழ்ப் பூச்சு, வண்ணம் தீட்டுகிறார்கள் தமிழ்ப் புலவர்கள். அவர்களில் ஒருவர்தான் துடிசை கிழார் சிதம்பரனார் என்று சொல்லி வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது என்பதோடு தமிழ் மொழியிலும் ஆரியக் கதை எப்படி எப்படி யெல்லாமோ திரிந்து ஊடுருவி விட்டது.

 

குறுமுனி என்றும், தென்முனி என்றும் அகத்தியருக்குப் பெயர் ஏற்பட்டது என்பதற்குப் புலவர்கள் குறுகிய முனி அகத்தியர் கட்டைவிரல் பருமன் என்று குறுகிய முனி என்று கூறுகின்றனர் அல்லவா, இதை மறுக்க, இக்கருத்தை மறுக்க, பொதிய மலை பாவனாசத்தில் அகத்தியருடைய தமிழ்ச் சங்கம் இருந்ததாகவும், குற்றா லத்திலும் அகத்தியருக்கு ஓர் இருக்கை இருந்ததாகவும், கோடைக் கால இருக்கையாக அது இருந்ததால் இவருக்குக் குற்றால முனி என்றும் பெயர் எனவும் குற்றால முனி என்பது குறுகிக் குறுமுனி ஆயிற்று. தென்தமிழ்நாட்டில் இருந்ததால் தென்முனி எனப்பட்டார் எனப் புதிய விளக்கம் கூறுவார் துடிசையார்.

 

நாம் அறிந்த வரையில் குற்றாலம் எங்கும் குறு என்று குறுகி வழங்கப்படவில்லை. குறும்பலா எனச் சிறிய பலாவை அழைப்பர். நம் நாட்டில் புலவர்களிடம் கற்பனைக்குப் பஞ்சமில்லை.

 

குறுமுனி என்ற புராணக் கதைக்கு மாற்று உரைக்கும் சப்பைக் கட்டு.

 

வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்துவிட்டது என்பதெல்லாம் சாத்தியமா, நடந்ததா? என்ற கேள்வி எழுகின்றது அல்லவா? அதற்கும் ஒரு வேடிக்கையான சப்பைக் கட்டு கூறுகிறார் துடிசையார்.

 

அதையும் படியுங்கள்.