குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 28 ம் திகதி செவ்வாய் கிழமை .

முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

இவர்களையெல்லாம் எண்ண எமக்குநேரமேதுவசதிவாய்ப்பிருக்கு வரும் சந்தர்ப்பத்தில் கொண்டாடி

மக்களுடன் கூடிமகிழ்வோம்  எங்கள் பணபலத்தைக்காட்ட காலத்தைத்தவறவிடலாமா? பற்பலதைச்யெ்வோம்

இக்காலக்கொண்டாட்டங்கள் தவிர்க்கமுடியாதவைசிலவுண்டு பிறந்தநாட்கள்  அவசியமானவையா?

தாய்மண்ணில் தவிப்போருக்கும் போரில் ஈடுபட்டு விடுபட்டுவந்து வாழவழியில்லாமல் தற்கொலைகள்பல

நாம் என்னசெய்தோம்! அடிப்படைஆதாரங்கள் கூடஏற்பாடுசெய்ய மூன்றாண்டில் முடியாதவர்கள்

கட்டுரைகள்எழுதிப்பயன்என்ன? கோடிகணக்கில் யாழ்நகரில் கட்டிடங்கள் வாங்கிச்சிங்களவன் உழைத்துப்போக

உறங்கிப்போக உல்லாச மதுக்கடைகள் களிப்பாட்டநிலையங்கள் விடுதிகளின் சொந்தக்கார்களே!

வாடகைக்கு குத்தகைக்கு சிங்களவருக்குகொடுத்துவிட்டு மாதமாதம் வங்கியில் வருகிறது என்கின்றீர்கள்

வருந்தியவர்களால் வாடியவர்களால் வந்தவாழ்வு அதனால்வந்தஉயர்வுஎமக்கு தாழ்வு அவர்க்கு!

அதைக்கொஞ்சம் எண்ணுங்கள் எள்ளளவு உதவிகள் செய்யுங்கள் காணிபார்க்கப்போனீர்கள் எத்தனைபேர்?

எத்தனைவறியவரைச்சந்தித்து ஆறுதல் செய்தீர்கள்.கோவில்களில் கொட்டிவந்தீர்கள்

கோடிக்கணக்கில் கோவில்கள் கட்டி ஊரெல்லாம் உள்ள குருக்கள்மாரைக் கூப்பிட்டு கும்பதிருமுழுக்குகள்

செய்தீர்கள் அவர்களுக்கு தர்ச்சனையாக வெற்றிலையில் பதினொராயிரத்திபதினொருபா

என்றுபலபேருக்கு சில்லறைமாற்றியதே பல இலட்சம் மார்ச்சிதம் சிவப்புச்சித்தாந்தம் நாத்தீகம் பேச

நான்வரவில்லை உங்கள்வழியில் புண்ணியம் தர்மம் அதர்மம் என்றால் என்ன? ஏன் அப்டி

எண்ண அறிவில்லை ஆத்மீகம் மனிதாபிமானம் சற்றிருந்தால் உறுப்பிழந்தவரிருக்க பெற்றோரில்லாப்

பிள்ளைகள் இருக்க தேர்த்திருப்பணிக்கு இலச்சக்கணக்கில் பணம்கொடுத்தோர் வெளிநாடுகளில்

ஆயிரக்கணக்கில் கோபுரத்திற்குபணம்கொடுத்தோர் பற்பலர் இணையம் இணையமாய் கடடுரைகள்

எழுதும் கல்விமான்கள் பலபேர் தொலைக்காட்சிகளில் திட்டித்தீர்கும் தேசப்பற்றாளர் பற்பலர்

நாம்செய்தநலத்திட்ட பட்டியல்கள் எங்கே? மகிந்தவைத்திட்டுவதும் துரோகிகளை ஆய்வுசெய்வதுமா

காலத்தால் செய்யும் உதவி கடன்பட்டு கொடுததவர்கள் கையறுந்து மறுக்கிறார்கள் சிலர்இல்லை

அதனால் இனியொன்றும் செய்யோம் என்கின்றார்கள்  தேசியம் தனிநாடு நாடியோர் ஓடியேஒழிக்கின்றனர்

முள்ளிவாய்கால் முடிவின்பின் துடித்துதுடித்து செய்தசெம்மையாகவர்கள் அருந்தலாக இருக்கிறார்கள்

அவலங்கள் போனபின் ஆண்டுகள்போனபின் அம்போ என்று கைவிட்டவர்கள்  மீண்டும்மேடைகட்டிக்

குலைக்கின்றார்கள் சந்தர்ப்பத்தில் சன்னதங்கள் ஆடிஆக்களை மருட்டிஅரசில்வாதியாகத்துடிக்கிறார்கள்.

தொடரும்....முள்ளிவாய்க்கால்பரணி--தமிழாண்டு2043-