குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

ரஷ்ய புரட்சியாளர் லெனினை விஷம் வைத்து கொலை செய்தார் ஸ்டாலின்: பரபரப்பு தகவல்

06.05.2012-ரச்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான யோசப் சு(ஸ்)டாலின் தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரச்யாவில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியவர் விளாமிடிர் லெனின். ரச்யாவின் சனாதிபதியாக லெனின் பதவி வகித்த காலத்தில், அவருக்கு பின் சனாதிபதி பொறுப்பை ஏற்கக்கூடிய வகையில் செல்வாக்கு மிகுந்த நபர்களாக விளங்கியவர்கள் ஸ்டாலின் மற்றும் டிராட்சுகி ஆவர்.

 

தொடக்க காலத்தில் லெனின், சுடாலினை ஆதரித்ததாகவும் பின்னர் டிராட்சுகிதான் தமக்குப் பின்னர் சரியான நபர் என முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

அதேபோல் சுடாலினின் சர்வாதிகாரத்தனத்தை அவர் விமர்சித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் கம்யூனிசுட் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை நீக்கவும் லெனின் முடிவு செய்திருந்ததாகவும் கூறுகிறார் ரசிய வரலாற்று ஆய்வாளர் லெ லுரி.

 

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்டாலின், விஷத்தைக் கொடுத்து லெனினை கொலை செய்ததாகவும் எப்பொழுதுமே தமது எதிரிகளை ஒழித்துக் கட்ட ஸ்டாலின் விஷத்தைத்தான் கையிலெடுப்பார் என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

 

மேலும் இந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வழி இருக்கிறது என்று கூறுகிறார். ஏனெனில் லெனினின் பதப்படுத்தப்பட்ட மூளை இன்றும் மாஸ்கோவில்தானே இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றார்.

 

இதற்கெல்லாம் ஆதாரமாக அவர் பேசுவது லெனினின் பிரேத பரிசோதனை அறிக்கை தான். லெனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூளை மிகவும் கடினமாகிப் போயிருந்தது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும், இதுவரை எப்படிக் கடினமாகிப் போனது என எவரும் சொல்லவில்லை என்பதாலே மர்மம் நீடிக்கிறது என்றும் லுரி சொல்கிறார்.

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.