குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

மீண்டும் கொடநாடு செல்கிறார் யெயலலிதா-சசியும் போவாரா?

22.04.2012-சென்னை: முதல்வர் யெயலலிதா விரைவில் கொடநாடு செல்லவுள்ளதாக தெரிகிறது. அவருடன் மீண்டும் தோழியாக இணைந்துள்ள சசிகலாவும் போவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் சில வாரங்கள் கொடநாடு தோட்டத்திற்குப் போய் ஓய்வெடுத்து விட்டு வருவது ஜெயலலிதாவின் வழக்கம். அவர் போகும்போதெல்லாம் கூடவே தோழி சசிகலாவும் செல்வது வழக்கம்.

 

இந்த ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் யெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென சசிகலா குடும்பத்தினருக்கும், அவருக்கும் பிரச்சினையானதால், தனது பயணத்தை நிறுத்தி வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்கினார்.

 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 3 மாதங்கள் கழித்து சசிகலாவை மட்டும் மீண்டும் தனது தோழியாக்கிக் கொண்டார். இதையடுத்து வெற்றிப் புன்னகையுடன் சசிகலா, போயஸ் தோட்டத்திற்குத் திரும்பினார்.

 

இந்த நிலையில் தற்போது கோடைகாலம் வாட்டத்தொடங்கியிருப்பதால், ஜெயலலிதா கொடநாடு செல்லத் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஒரு மாதம் வரை அவர் கொடநாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையடுத்து அவர் அங்கிருந்தபடியே தனது அலுவல்களையும், கட்சிப் பணிகளையும் ஆற்றுவதற்கு வசதியாக, அதற்குத் தேவையான ஏற்பாடுகள் கொடநாடு எஸ்ட்டேடில் தொடங்கி நடந்து வருகிறதாம். தகவல் தொடர்பு வசதிகள், முதல்வருடன் வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறதாம். வீடியோ கான்பரன்சிங் வசதியும் செய்யப்படுகிறதாம்.

 

முதல்வர் கொடநாடு எப்போது செல்வார் என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த மாதத்தில் அவர் போகலாம் என்று கூறப்படுகிறது. இம்முறையும் அவருடன் சசிகலா செல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.