குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தமிழக உறுப்பினர்கள் விலகினாலும் இந்தியக் குழு இலங்கை வருமாம்!

14.04.2012-இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள நிலையில், அதன் பயணம் வெறும் சுற்றுலாப் பயணமாகவே அமைந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி அக் குழுவிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிக் கொண்டனர்.

இந் நிலையில் இவ் விலகலைத் தொடர்ந்து மேற்படி குழுவின் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் இக் குழுவின் பயணம் திட்டமிட்டபடி இடம்பெறும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டபடி வரும் 16ம் நாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சிறிலங்கா வரவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திசநாயக்க சீன செய்தி நிறுவனமான ‘சின்கிவா‘வுக்கு தெரிவித்துள்ளார்.

“இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நல்லெண்ணப் பயணம்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவினர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியைச் சென்று பார்வையிடவுள்ளதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராயபக்சவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் சரத் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் பயணம் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிவதற்கு முக்கியவத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி தமிழ்நாடு முதல்வர் யெயலலிதா தமது கட்சியின் சார்பில் நியமித்த பிரதிநிதியை இந்தக் குழுவில் இருந்து விலக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.