குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

அதிமுக, பாயக ஆதரவுடன் மீண்டும் நாட்டின் சனாதிபதியாக அப்துல்கலாமுக்கு வாய்ப்பு விஞ்ஞானச்சூரியனுக்கு முன் உதயசூரியன் நிற்கத் தயங்கி அத்துல்கலாமை ஒதுக்கினர்.

07.04.2012-சனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதையடுத்து புதிய சனாதிபதியை தெரிவு செய்ய வருகிற சூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் புதிய சனாதிபதியை ஆளும் காங்கிரசு கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியான பா.ய.க.வோ தன்னிச்சையாக தெரிவு செய்ய முடியாது.

 

மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் தான் சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இந்த பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரலாம் என்று கூறப்படும் நிலையில் தனது ஆதரவு நபர் சனாதிபதியாக வேண்டியது அவசியம் என்று பா.ய.க, காங்கிரசு இரு கட்சிகளும் பலரது பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றன.

 

காங்கிரசு கட்சி சார்பில் துணை சனாதிபதி கமித் அன்சாரி, மத்திய மந்திரிகள் பிரணாப்முகர்யி, ஏ.கே. அந்தோணி, சோனியாவின் குடும்ப நண்பர் சாம்பிட் ரோதா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் சமீபகால ராணுவ ஊழல் சர்ச்சைகளில் சிக்கியதால் ஏ.கே.அந்தோணி பெயர் பரிசீலனையில் இருந்து கைவிடப்பட்டுள்ளது.

 

காங்கிரஸ் தலைவர்கள் துணை சனாதிபதி கமீத் அன்சாரியைசனாதிபதி வேட்பாளராக அறிவிக்க ஆதரவு அளித்துள்ளது. கமீத் அன்சாரியை காங்கிரசு நிறுத்தினால், அவரை எதிர்த்து முன்னாள் சனாதிபதி அப்துல் கலாமை களத்தில் இறக்க பா.ய.க. தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

பா.ய.க.வுக்கு பல மாநில கட்சிகளின் ஆதரவு உள்ளது. அவர்கள் ஆதரவுடன் அப்துல்கலாமை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று பா.ய.க. தலைவர்கள் நம்புகிறார்கள். அதோடு சிறுபான்மை இனத்தை பிரதிநிதிகளின் வாக்குகளை பெற முடியும் என்றும் கருதுகிறார்கள்.

 

பா.ய.க. நிறுத்தும் சனாதிபதி வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கும் என்று அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஏற்கனவே சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

அ.தி.மு.க.வுக்கு தமிழக சட்டசபையில் 150 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 9 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் பா.ய.க.வுக்கு மிகவும் கைகொடுப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.