குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

எதிர்வரும் 40 ஆண்டுகளில் மக்கள் தொகை நிலவரம்: இந்தியா, சீனா முதலிடம் ஆளில்லா கப்பலை கண்டுபிடித்த அமெரிக்கக் கடற்படையினர்

06.04.கி.அ2012தமிழாண்ட2043உலக நகரங்களில் எதிர்வரும் 40 ஆண்டுகளில் மக்கள் தொகை நிலவரம் குறித்து சில புள்ளி விவரங்களை ஐ.நா.சபை நேற்று வெளியிட்டது.

அப்புள்ளி விபரத்தில், நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியாவும், சீனாவும் முன்னிலையில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த மக்கள் தொகை வளர்ச்சியானது அந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் வேலைவாய்ப்புகள், வீட்டு வசதி, எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மக்கள் தொகை பெருக்கம், அந்நாடுகளுக்கு புதிய சவாலாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நையீரியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் கணிசமாக இருக்கும்.

2010-2050 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய நகர மக்கள் தொகையில் கூடுதலாக 49.7 கோடி பேர் (497 மில்லியன்) சேருவார்கள்.

சீனாவில் 34.1 கோடி, நையீரியாவில் 20 கோடி, அமெரிக்காவில் 10.3 கோடி, இந்தோனேஷியாவில் 9.2 கோடி என மக்கள் தொகை பெருக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை வளர்ச்சியின் போக்கானது நையீரியாவில் அபரிமிதமாக இருக்கும். கடந்த 1970 முதல் 2010 வரையிலான 40 ஆண்டுகளில் இங்கு நகர மக்கள் தொகை பெருக்கம் 6.5 கோடியாக மட்டுமே இருந்தது.

 

2010 முதல் 2050 வரையிலான காலக்கட்டத்தில் மக்கள் தொகை பெருக்கம் 20 கோடியாக இருக்கும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நகரங்களை நோக்கி மக்கள் வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

 

ஆளில்லா கப்பலை கண்டுபிடித்த அமெரிக்கக் கடற்படையினர்

 

ஜப்பானில் சென்ற ஆண்டு ஏற்பட்ட சுனாமி காரணமாக காணாமற்போன கப்பல் ஒன்று அமெரிக்காவின் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்டெடுக்கப்பட்ட ரியோ-உன்.மரு என்ற இந்தக் கப்பலை இனிப் பயன்படுத்த இயலாது என்பதால் அதன் முதலாளி வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

 

அந்தக்கப்பலில் மின்சாரம் பாதிக்கப்பட்டதால் விளக்குகள் பயன்படுத்த முடியாது.. இருட்டில் அந்தக்கப்பல் மிதக்கும் நேரத்தில் விபத்து ஏற்படக்கூடும். எனவே அதன் அடிப்புறத்தில் துளையிட்டு அதனை மூழ்கடிக்க அமெரிக்கா கடற்படை திட்டமிட்டுள்ளது.

 

இந்த கப்பலில் 8000 லீட்டர் எரிபொருள் உள்ளது. இது இறால் மீன் பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கப்பலாகும். இதனை சரி செய்து இதன் ஆட்களை ஏற்றிச்செல்வது ஆபத்தாக முடிந்துவிடும் என்று காவல்படை அதிகாரி கிப் வாட்லோ ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

 

மார்ச் மாதம் 23ம் திகதியன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கடற்கரைப்பகுதியில் இந்தக் கப்பல் மிதந்து வருவதை மக்கள் கண்டனர்.

 

இப்போது அலாஸ்கா நாட்டின் சிட்காவுக்கு தென்மேற்கே கடலுக்குள் 170 மைல்(315 கி.மி) தூரத்தில் காணப்படுகின்றது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு மைல் தூரம் வேகத்தில் கடற்காற்றால் தள்ளப்பட்டு அமெரிக்கா- கனடா கடல் எல்லையில் மிதக்கின்றது.

 

கெர்குலிசு C-130 என்ற விமானம் அந்தக் கடல்பகுதியில் வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்பு இந்தக்கப்பல் மூழ்கடிக்கப்படும்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.