குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

'லவ் ஜிகாத்' பற்றி ஆதாரம் இல்லை: கேரள டிஜிபி அறிக்கை

முஸ்லிம் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்களின் காதல் வலையில் சிக்கவைத்து பின்னர் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றும் "லவ் ஜிகாத்' முயற்சி பற்றி தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில காவல் துறை புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

காவல்துறை தலைவர் ஜேகப் புன்னோஸ் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: லவ் ஜிகாத் பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் அனுப்பியுள்ள அறிக்கைகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் முரணாக உள்ளன. அதனால் இது பற்றி திட்டவட்ட முடிவுக்கு வர முடியவில்லை.

 

ஆயினும், மோசடி வேலைகள் மூலம் மத மாற்றம் செய்ய சில குழுக்கள் மறைமுகமாக ஈடுபடுவது பற்றி சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கொடுத்துள்ள அறிக்கைகளில் 3 பேரின் அறிக்கைக்கு ஆதாரம் இல்லை. செவிவழி செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தரப்பட்டுள்ளது. எனவே கட்டாய மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சந்தேகமற அறிக்கை தர இந்த 3 அறிக்கைகளும் உதவவில்லை. இந்த 3 அறிக்கைகளில் உள்ள தகவல்கள் குறித்து இன்னும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றார் புன்னோஸ்.

 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தாக்கல் செய்திருந்த 18 அறிக்கைகளையும் அக்டோபர் 26-ம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப சீலிட்ட உறையிலிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் டிஜிபி புன்னோஸ்.

 

இந்த பிரச்னை தொடர்பாக அக்டோபர் 22ம் தேதி டிஜிபி தாக்கல் செய்த அறிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம் அல்லாத பெண்களை முஸ்லிம் இளைஞர்களின் காதல்வலையில் சிக்கவைத்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் முயற்சிகள் ஆங்காங்கே நடப்பதாகவும் ஆயினும் லவ் ஜிகாத் பற்றி தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் மழுப்பலாக உள்ளதாக உயர்நீதிமன்றம் குறை கூறியிருந்தது. மேலும் லவ் ஜிகாத் தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்த அறிக்கைகளை சீலிட்ட உறைக்குள் வைத்து நவம்பர் 11ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டிருந்தது.

 

இதே 'லவ் ஜிகாத்' பிரச்னை கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் எழுப்பப்பட்டது. இந்த பிரச்னை பற்றி கூட்டாக விசாரித்து நவம்பர் 13-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடகம், கேரள காவல்துறைக்கு அக்டோபர் 26-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.