குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 18 ம் திகதி புதன் கிழமை .

யாழ். இந்து எதிர் கொக்குவில் இந்து ஒருநாள் மட்டைப் பந்தாட்டப் போட்டி

06.03.2012-இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி இடையேயான 50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததன்படி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

முன்னதாக மைதானத்தில் சிறிலங்கா தேசியக் கொடி, யாழ். இந்துவின் கொடி, கொக்குவில் இந்துவின் கொடி என்பன ஏற்றப்பட்டு விளையாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராகக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வட மாகாணச் செயலர் எஸ். சத்தியசீலன் கலந்துகொண்டுள்ளார்.