குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

இந்தியா என்ன செய்யப் போகிறது?

06.03.2012-யெனிவாவில் மார்ச் 3 ஆம் வாரம் நடக்க இருக்கும் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அதிபர் ராயபக்சேமீது மனித உரிமை மீறல் - போர்க் குற்ற  தீர்மானம் அமெரிக்காவால் கொண்டுவரப்பட உள்ளது.

இந்தத் தீர்மானத்தை எப்படியும் தோற்கடித்து தன் நெற்றியில் மனிதாபிமான பட்டையைத் தீட்டிக் கொள்ள ராயபக்சே கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ராயபக்சேவுக்குரிய தண்டனையைக் கொடுப்பதன் மூலமாகத்தான் 21 ஆம் நூற்றாண்டின் மரியாதையே அடங்கி இருக்கிறது.

தேர்தலில் முரண்பட்ட கட்சிகளையெல்லாம் கூட்டணியில் இணைத்துக்கொண்டு செயல்படுவதுபோல, அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறது என்பதற்காக கம்யூனிசுடு நாடுகள் ராயபக்சேவைத் தூக்கிச் சுமக்க ஆசைப்பட்டால், அதைவிட அருவருப்பான செயல் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு ஆயுதங்களை வாரி வழங்கிக் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்ட சீனா, ருசிய நாடுகள் யெனிவாவில் கொண்டுவரப்பட உள்ள கண்டனத் தீர்மானத்தை எதிர்ப்பார்களேயானால், இந்நாடுகளுக்கு அவமானம் மட்டுமல்ல - கம்யூனிசம் என்னும் உயர்ந்த சித்தாந்தம், உலக மக்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கம்யூனிஸ்டு நாடுகளே கம்யூனிசத்தின் கோட்பாடுகளைக் காயடிக்கும் ஒரு வேலையில் இறங்கி விட்டதாகப் பொருள்படும். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

யெனிவா தீர்மானத்தில் இந்தியா இலங்கைக்கு சாதகமாக இருக்கும் என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியது.

ஈழத் தமிழர்கள் இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா துணை போய்விட்டது என்கிற அழுத்தமான குற்றச்சாற்றிலிருந்து வெளிவர முடியாமல் விழிபிதுங்கிக் கொண்டு இருக்கும் இந்தியா, ஜெனிவா தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிக்குமானால், உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலக நாடுகளின் மத்தியிலும் மரியாதையை இழக்க நேரிடும், எச்சரிக்கை!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்; இதனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது சிறீலங்கா அரசின் கச்சேரி (Local Govt Office) என்ற அமைப்பாகும்.

இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்கள் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நா.வின் ஓச்சா அமைப்பின் கணிப்புகள் கூறுகின்றன. எஞ்சிய ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் கதி என்ன?

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரா சூசை அடிகளார், சேவியர் சூலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரங்களை அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவிடமே (LLRC) தெரிவித்தனரே!

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை மறைப்பதன்மூலம் உலகத்தின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப் பார்க்கிறது இலங்கையின் பாசிச அரசு!

விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை ஒருவரைக்கூட கொல்லாமல் (With Zero Civilian Casuality) அனைவரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் ராஜபக்சே புளுகுவார்?

அய்.நா. அமைத்த மூவர் குழு ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தள்ளுபடி செய்ததே!

இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென்னாப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவரின் குழு தனது ஆய்வறிக்கையை அய்.நா.வின் பான்-கீ-மூனிடம் அளித்தது. அதனை யோக்கியமான சிங்கள அரசு நிராகரிக்கிறதாம் - நண்டை நரியிடம் கொடுத்தால் என்னவாகும்?

அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அதிபர் ராஜபக்சேமீது விசாரணை நடத்தப்படவேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பது முக்கிய தீர்மானம் (26.5.2009).

அந்த மனிதநேய - மனித உரிமைத் தீர்மானத்தைத் தோள்தட்டி முன்னின்று தோற்கடித்ததில் முதல் பரிசு இந்தியாவுக்கே!

பன்னாட்டு நீதிமன்றத்தின்முன் ராஜபக்சே நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தைக் கூட நடத்தியதுண்டே! (28.4.2011)

இவ்வளவுக்குப் பிறகும் ஜெனிவா தீர்மானத்தின்மீது யார் பக்கம் நிற்பது என்பதில் மனிதநேயம், மனித உரிமை இவற்றுக்கு எதிராக இந்தியா - இலங்கையின் பக்கம் நிற்குமானால், உலகத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல - உலக மக்கள் மத்தியில் குனிந்துவிட்ட இந்தியாவின் தலை நிமிரவே நிமிராது!

இதுகுறித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெளிவாகவே அறிக்கையின்மூலம் கேட்டுக் கொண்டதையும் (21.2.2012) மீண்டும் நினைவூட்டுகிறோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.