குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ந்திரனைப் பற்றிய மர்மங்கள் துலங்கும் வாய்ப்பு.

05.03.2012-சந்திரனில் அதிகளவு குடி நீர் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்தியாவின் விஞ்ஞனானிகளும் இதை உறுதி செய்துள்ளனர். சந்திரனில் கனிம வளங்கள் நிறைய இருப்பதையும் விஞ்ஞான நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன.

சந்திரனில் உள்ள வளங்களை ஆய்வு செய்வதற்கு அமெரிக்கா, ருஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கடும் ஆர்வம் காட்டுகின்றன. இவை எல்லாம் உறுதிப் படுத்தப்படாத நிலையில் தான் இருக்கின்றன.

சந்திரனின் மேற்பரப்புக்குக் கீழப்; பகுதியில் என்ன இருக்கிறது என்பதை இதுவரை ஒரு நாடும் கண்டுபிடிக்கவில்லை. இது வரை அறியப்பட்டதெல்லாம் மேற்பரப்பில் உள்ளது பற்றியது தான்.

ஜனவரி 2012ல் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வகம் நாசா அனுப்பிய இரு றோபோ ஆய்வுச் செய்மதிகள் சந்திரனைச் சுற்றத் தொடங்கியுள்ளன. இந்த 330 கிலோ எடை றோபோ ஆய்வுச் செய்மதிகளுக்கு கிரேயில் (Grail) என்று பெயரிடப்பட்டுள்ளது.இதன் விரிப்பு பின்வருமாறு.

ஈர்ப்புவிசை கண்டு பிடிப்பு மற்றும் உட்புற ஆய்வுகூடம் (Gravity Recovery and Interior Laboratory) கிரேயில் சந்திரனின் இழுவை வீச்சு பற்றிய ஆய்வை மார்ச்சு மாதத்தில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.

கிரேயில் சந்திரனைச்சுற்றி வட்டமிட்ட படி ஆய்வுகளைத் தொடங்கி முடிக்கும் என்று நாசா அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திரனின் மேற்பரப்புக்கு 55 கிலோமீற்றர் உயரத்தில் பறந்தபடி கிரேயில் ஆய்வுகூடம் இயங்கத் தொடங்கும்.

கிரவிற்றி எனப்படும் புவி ஈர்ப்புவிசை சந்திரனில் வேறுபட்ட நிலையில் காணப்படுகிறது. சந்திரனில் வௌ;வேறு இடங்களில் ஈர்ப்புவிசை வேறுபடலாம் என்றும் ஏற்கனவே நம்பப்படுகிறது.

சந்திரனுக்கு இதுவரை நூறு வரையான ஆய்வுச் செய்மதிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சந்திரனின் உட்புறம் பற்றிய மர்மம் இதுவரை அறியப்படவில்லை. சூரிய மண்டலம் ஆரம்பிக்கப்பட்ட தொடக்க காலத்தில் ஏதோவொரு கிரகம் பூமியில் மோதியதாக விஞ்ஞான ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

பூமி அப்போது திரவ நிலையில் இருந்ததாகவும் பூமியில் மோதிய கிரகம் செவ்வாய் அளவாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மோதல் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கலாம். என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மோதலுக்குப் பிறகு பூமி குளிர்ந்து திடப் பொருளாக மாறியதாகச் சொல்லப்பட்டாலும் அது தொடர்பான உறுதியான தரவுகள் கிடைக்கவில்லை. கிரேயில் சரியான தரவுகளை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் இருந்து மோதலின் போது தெறித்த பகுதி தான் இந்தச் சந்திரன் என்று நம்பப்படுகிறது. சந்திரன் பற்றிய இன்னொரு மர்மம் இருக்கிறது.

சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது எப்போதும் ஒரே முகத்தை மாத்திரம் காட்டிக் கொண்டிருக்கும். எதிர்ப்புற முகத்தைச் சாதாரணமாக எம்மால் பார்க்க முடியாது.

சந்திரனைச் சுற்றிய செய்மதிகள் இரு பக்கங்களையும் படம் பிடித்துள்ளன.  பூமியைப் பார்த்தபடி சுற்றும் பக்கம் புராதன கால எரிமலைகள் வெடித்த அடையாளங்களும் கருமையான நீண்ட சமவெளிகளும் நிரம்பியதாக இருக்கின்றது.

ஆனால் அதன் எதிர்ப்பக்கம் முழுக்க முழுக்க உயர்ந்த குன்றுகளும் பீடங்களுமாகக் காணப்படுகின்றது. இந்த வேறுபாட்டிற்கான விளக்கத்தை வழங்க முடியாமல் விஞ்ஞானிகள் தடுமாறுகின்றனர்.

கிரேயில் ஆய்வு கூட்டத்தை இயக்கும் பிரதம விஞ்ஞானி மாரியா சூபர் (Maria Zuber) வேறுபாட்டு மர்மத்தைத் துலக்கும் இரகசியம் சந்திரனின் ஆழமான பகுதியில் இருப்பதாகக் கூறுகிறார்.

அமெரிக்காவின் முக்கிய ஆயுத தளபாட மற்றும் செய்மதிகள் தயாரிப்பு நிறுவனம் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் (Lockheed Martin Corp) உருவாக்கிய கிரேயில் ஆய்வுகூடம் 496 மில்லியன் டாலர் பணத்தை விழுங்கியுள்ளது.

யூன் 2012ல் சந்திர கிரகணம் வரவிருக்கிறபடியால் அது தொடர்பான ஆய்வுகளையும் கிரேயில் நடத்தும். அதற்குப் பிறகு கிரேயில் பறக்கும் உயரம் 28 கிலோ மீற்றருக்கு இறக்கப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடம் முடியு முன்பு சந்திரன் தொடர்பான பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.