குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இயற்கையை விரும்பும் சுவிற்சர்லாந்து மக்கள் இயற்கை அழகு இருந்தும் இரசிக்கத்தெரியாத பேணத்தெரியாத இலங்கையர்கள்.

 

27.02.கி.ஆ2012தமிழாண்டு2043காடுகளில் பயணம் மேற்கொள்வதன் மூலம் தங்களது பணிச்சுமை குறைந்து மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது என சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

சுவிட்சர்லாந்து மூன்றில் ஒரு பகுதி காடாக இருப்பதால் அங்கு வாழும் மக்கள் காட்டை மிக அதிகம் விரும்புபவர்களாகவும், காடுகளில் நெடுந்தொலைவுப் பயணம் செய்வதையும் விரும்புகின்றனர்.

 

இயற்கையை விரும்புபவர்களாக விளங்கும் இம்மக்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இவர்களின் ஆர்வம் மென்மேலும் அதிகமாக இருப்பது உறுதியானது.

 

காடு, பனி மற்றும் நிலப்பகுதிக்கான மத்திய ஆராய்ச்சி மையம்(WSL) நடத்திய, காடு கண்காணிப்பு சமூகப் பண்பாட்டு ஆராய்ச்சியின் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

 

இந்த ஆராய்ச்சி கடந்த 1997ம் ஆண்டு முதல் இன்றுவரை, காடு மற்றும் வனம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனப்பான்மை எத்தகையது என்று அறிய முற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சுமார் 95 சதவீத மக்கள், காடுகளுக்கு செல்வதினால் தங்களின் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதாக தெரிவித்தனர்.

 

இந்த ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநரான கிறிஸ்டோஃபர் ஹெக் கூறுகையில், இயற்கையை விரும்பி மக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்வதாகத் தெரிவித்தார். மேலும் காடுகள் காற்றைச் சுத்தப்படுத்தி நல்ல காற்றை தருகின்றது, நிழல் தரும் மரங்களையும் உயிர்களை பாதுகாக்கின்றது என்று தெரிவித்தார்.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.