குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ் அகதிகள் இலங்கை திரும்பினால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப் படுமா?

13.02.2012தமிழ் அகதிகள் இலங்கை திரும்பினால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கப் படுமா? என்பன போன்ற கேள்விகளை இலங்கை தூதரக அதிகாரியிடம் கேட்டு 2 பேர் வாக்கு வாதம் செய்ததால் பர பரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத் தில் அகதிகளாக வாழும் தமிழ் மக்களுக்கு குடி யுரிமை மற்றும் பிறப்பு சான்றிதழ் கலெக்டர் அலுவலகத்தில் வழங் கும் பணி நேற்று நடந் தது. ஆட்சியர் மகரபூஷ ணம், மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் முக் கிய அதிகாரிகள் சான்றி தழ் வழங்குவதற்காக இந் தியாவுக்கான இலங்கை துணை தூதரக துணை ஆணையர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியுடன் இருந்தனர்.

பகல் 11.35 மணிக்கு கூட்ட அரங்கிற்குள் காவல் துறை பாதுகாப்பையும் மீறி தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநில தலைவர் பூமொழி, தோழர்கள் வட்ட அமைப்பாளர் காமராஜ் ஆகியோர் திடீரென்று உள்ளே வந்தனர்.

இருவரும் நேராக துணை தூதரக அதிகாரி வடிவேல்கிருஷ்ணமூர்த்தி யிடம் வந்து, ``நீங்கள் தான் இலங்கை தூதரக அதிகாரியா? என்றனர். அதற்கு அவர் ஆம்... நான்தான். என்றார்.

உடனே இருவரும், ``தற்போது அகதிகளாக வாழும் தமிழர்கள் இலங்கை திரும்பினால் அவர்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள்?, இலங்கையில் தமிழர் கள் கொன்று குவிக்கப் பட்டார்களே அப்போது நீங்கள் என்ன செய்தீர் கள் என்றும், தமிழ் பெண் கள் பலவந்தமாக கற் பழிக்கப்பட்டு கொல்லப் பட்டனரே? அப்போது என்ன செய்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

இதுபோன்ற கேள்வி களை எதிர்பார்க்காத தூதரக அதிகாரி வடி வேல் கிருஷ்ணமூர்த்தி திணறிப்போனார். என்ன பதில் சொல்வ தென்று தெரியாமல்.. யார்..யார் இவர்கள்? என மற்றவர்களை பார்த்து தடுமாற்றத்துடன் கேட்டார். அப்போது அங்கிருந்த பிற அதி காரிகள், வடிவேல் கிருஷ் ணமூர்த்தியை அருகில் உள்ள அறைக்கு கூட்டிச் சென்று கதவை தாழிட் டுக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரங்கில் பலத்த குரல் எழுப்பிய சத்தம் கேட்டு, பாதுகாப்பு பணி யில் ஈடுபட்ட காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காவல் துறையினர் பூமொழி, காமராஜ் ஆகியோரை அரங்கிற்கு வெளியே அழைத்து சென்றனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில்களிலும் நேற்று 50 காவல்துறை யினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர். ஆட்சியர் அலுவலகத் திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் இதர நபர்கள் யார் வந்தாலும் அவர் களை காவல்துறையினர் கடும் சோதனைக்கு பின் னரே அனுமதித்தனர். பிரச்சினை ஏதும் நடந் திட கூடாது என்பதற் காகவே இதுபோன்ற நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்தனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க நிறுவன தலைவரான பூமொழி சேலம் டவுன் காவல் துறையினருக்கு நன்கு அறிமுகம் ஆனவர். இப் படி பலத்த பாதுகாப் பையும் மீறி பூமொழி, காமராஜ் ஆகிய இரு வரும் கூட்டம் நடந்த அரங்கிற்குள் நுழைந் தது எப்படி என்பது காவல்துறையினருக்கே குழப்பமாக உள்ளது. இருவரையும் காவல் துறையினர், சேலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரணை நடத்தினார்கள்.

 

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.