குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாகிசுதான் அரசு உதவ வேண்டும் அந்நாட்டு பத்திரிகை வலியுறுத்தல்

13.02.2012- இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நீதி கிடைப்பதற்கு பாகிசுதான் குறுக்கே நிற்கக் கூடாது என பாகிசுதானில் இருந்து வெளியாகும் டோன் நாளேடு தெரிவித்துள்ளது இலங்கையில் போர்க் குற்றங்கள் என தலைப்பில் மேற்படி பத்திரிகையில்,நேற்று இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. கொழும்பிலும் ஈரானிலும் பிபிசியின் முகவராக பணியாற் றிய பிரான்சிசு கரிசன் இந்தக் கருத்தை எழுதியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதிராக போரை முடிபுக்கு கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட் டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையைக் கூற வைப்பதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதற்கான அறி குறிகள் தென்படுகின்றன.ஜெனிவாவில் அடுத்த மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வருவதற்கு தீர்மானம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இந் நிலையில் சிறுபான்மை தமிழர் களுக்கு நீதி கிடைப்பதற்கு பாகிஸ்தான் குறுக்கே நிற்கக் கூடாது.

ஐ.நா. மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் ஐந்து மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இறந்த வர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்று பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்று ஜனாதிபதி மகிந்த பாகிஸ்தானிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டு போரில் உயிர் பிழைத்தோர் இறப்புக்களை இன்னும் கணக்கெடுக் கிறார்கள் என்ற தலைப்பிலான நூல் ஒன்றை பிரான்சிஸ் ஹரிசன் இந்த கோடைகாலத்தில் லண்டனில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.