குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

97 இலட்சம் சதுரமைல் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை .

  97 இலட்சம் சதுர மைல் பரப்புக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருப்பது செயற்கைக் கோள்களினால் பிடிக்கப்பட்ட படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. காடுகள் அழிக்கப்படுவதாலும் நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் வேகமாக மாசமடைந்து வருவதனாலும் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த செப்டெம்பர் நடுப்பகுதியில் செயற்கைக் கோள்களின் மூலம் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை படம்பிடிக்கப்பட்டு அளக்கப்பட்டது.
இன்றைய வட அமெரிக்காக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவுக்கு ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.
அந்தாட்டிக்கா துருவப்பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டிருக்கிறது என்பதை 1970 களில் செயற்கைக் கோள்கள் தான் முதன் முறையாகக் கண்டுபிடித்தன.
ஆனால், அது குறித்து கவலைப்பட்டும் எச்சரித்தும் பேசிய உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்துமே ஓசோன் படலம் ஓட்டை விழாமல் காப்பதற்கான நடவடிக்கைகளில் உளப்பூர்வமாக ஈடுபடவில்லை என்பதே உண்மை. இதனால் 1980 களிலும் 1990 களிலும் இந்த ஓட்டை பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது.
இந்நிலையில் ஆர்டிக் கடல் பகுதியில் புவிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தின் கடுமையான குளிர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு ஓசோன் படலத்தைக் கரையவைக்கும் இரசாயனங்கள் உயிர்ப்படைந்து ஓட்டையைப் பெரிதாக்கின.
புவிக்கு மேலே உள்ள பகுதியில் வேண்டுமானால் ஓசோன் என்பது மாசுப்படலமாக இருக்கலாம். ஆனால், விண்வெளியிலிருந்து புவியை நோக்கி வரும் பாதகமான புறஊதாக் கதிர்களைத் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பும் கேடயமாக அது செயல்படுகிறது.
குளோராஃபுளோரா கார்பன்கள்தான் ஓசோன் படலத்தைத் துளைக்கின்றன என்பதால் அவற்றுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓரளவுக்கு ஓசோன் படலம் மீட்சி பெற்று வருகிறது. அப்படியும் மிக மெதுவாக இந்தச் சிதைவு தொடர்கிறது.
இந்நிலையில் முதல் முறையாக இந்த ஆண்டு ஆர்டிக் கடல் பரப்பிலும் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு தொடர்கிறது.
இம் மாதம் 27 ஆம் திகதி நாசாவின் மற்றொரு செயற்கைக்கோள் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள சிதைவின் தன்மையை வெகு நெருக்கமாகச் சென்று படம்பிடித்து ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.