குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

வடமாகாண முதலமைச்சர்யார்? நீச்சல்தடாகம் திறப்பு சாவகச்சேரியில் பழையமருத்துவமனை திறப்பு! தமிழில்பேச்சு

07.02.2012-த.தே.கூ வடமாகாண முதல்வருக்கான வேட்பாளர் வியிதரன் என்ற கனவு ஆளும்தரப்பின்  உறக்கத்தை குலைத்து விட்டது. அதனாலும் நாடாளுமன்றத்தில் விசயகலா எம்.பி சாவகச்சேரி மாணவனின் கொலையைக் கூறி நாரைஉரித்ததும்   ஆளும் தரப்பிற்கு சேலையை உரிந்தமாதிரி

அதனால் வெற்றிலை அல்லது வீணையை முதலமைச்சர் ஆக்கும் முயற்ச்சியில் விம்மரமாக  ஈடுபடத்தொடங்கிவிட்டனர் என்பதுடன்  யெனிவாகூட்டத்தொடரை கையாழ வடமாகணசபைத் தேர்தலையும் துாக்கிப் பிடித்துக்காட்டும்  உள்நோக்கமும் இருக்கிறது. இதனால் அபிவிருத்தி அண்டஆகாயப்புழுகு தொடங்கி  ஊடகங்களில் காட்சிக்கான நாடகங்களாக திறப்புவிழாக்களும் நடக்கத் தொடங்கி விட்டன. அந்ததிறப்புவிழாக்களில்  புத்திமதிகள் வேறு சொல்லப்படுகிறது. இழவுவீட்டிலே தமிழர்கள்  கலியாணவீடு செய்யலாம்  அதில் அமைச்சர்கள் வந்து வாழ்த்தரிசி போடுவார்களாம் என்கின்றனர்.  ஆர்செத்தாலும்  அழுவதைவிட்டு  சிரியுங்கள் என்கின்றார்கள். இந்தத்துணிவிற்கு காரணம்  சில சுயநலவாதிகளின்  நடவடிக்கைகளே!  நாம் ஒரே வீட்டுப் பிள்ளைகள் உண்மையென்றால்  ஆளுநரின் பக்கச்சாரபான அமைச்சர்களின் பக்கச்சார்பான நடவடிக்கைகள் ஏன் மக்கள் விரும்பும் கட்சியை ஆளவிடுங்கள்  அதற்கு மாறாக மறைமுகமாக  என்வெல்லாம் செய்கின்றீர்கள் என்று மக்களுக்கு  தெரியாதா? வெளிநாட்டுத்தமிழர் நல்லுார்த்திருவிழாவுக்கு பிள்ளைகளுடன் வந்து தங்கி பணம்  கொட்ட அதைஅள்ளி மகிழவிடுதிகட்ட  அத்திவாரம்போட இருக்கும் அவசரம் வன்னி மக்களுக்கு வீடுகட்டிக் கொடுப்பதில் காட்டப்பட வில்லையே!

 

கூ.அமைப்பும் மூன்றாண்டுகாலம்  இரண்டு மாவட்டமக்களுக்கு கூட வீடுகட்டிக்கொடுக்க  உலகஉதவியை நேரடியாகப் பெற முடியாதவர்கள் வேறு என்ன செய்யப்போகின்றார்கள் என்று மக்களும் எண்ணக்கூடும். மாற்றுத்திட்டமின்றி  துாற்றும் திட்டம் நீண்டகாலத்திற்கு பலிக்காது.  போராளிகளே இராணுவத்தினரை திருமணம் செய்யும் காலமாய் காலம் மாறியிருக்கிறது அல்லது மாற்றப்பட்டிருக்கிறது என்பதனையும் மறந்து விடக்கூடாது கூட்டமைப்பு.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் கட்டிக்கொடுக்காத  வீடுகளுக்கு என்ன கணக்கு  உலகம் உதவிநிறுவனங்கள் கொடுப்பதை தாம்  தருவதாக நாடகமாடுவதை மக்கள் உணரமாட்டாரகள் என்று எண்ணுகின்றார்களோ! கீரிமலையில் தங்கமுலாம் கட்டிநாலும் இவர்களின் கள்ள முகத்தை இறைவன் நல்லமுகமாக மாற்ற மாட்டார். 70.000 பெறுமதியில் மாலைபோடும் மைனர்களே  விதைவைப் பெண்களை மந்தீர்களோ? கால் இல்லாதவர்களை மறந்தீர்களோ? தாய்தந்தையில்லாத  பிள்ளைகளை மறந்தீர்களோ? உதவிக்காகதந்தபணத்தில் தங்கமுலாம்  தடவும் வேடதாரிகளே  மக்களின் சீற்றம் தேர்தலில் தெரியும். பட்டதாரிகளுக்கு வேலை வழங்காது இழுத்தடிப்பு தேர்தலில் வென்ற கிராமசபைகளை இயங்கவிடாது  மிரட்டல் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சனநாயகம்  ஆளும்தரப்பு நிர்வகிக்கும் கிராமசபைகளை தொட்டுநனைத்து அபிவிருத்தி செய்வது போல நடத்துவது  வீதிகள் குண்டும் குழியும் கட்டடங்கள் பாலங்கள் திறப்புவிழாக்கள்  கோபுரக்கலசவிழாக்கள் எனகலகலப்பு இதற்கு கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாழப்பாண மக்கள் ஆடிப்போய்விட்டார்களா?  ஊடுருவிப்பார்ப்பார்களா?