குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

திராவிட என்பது ஓர் இனத்தின் பண்பாடு என்றும் கூறினார் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள்.

27.01.-2012-திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் --காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:- இந்தியை ஆதரித்த ராயாயியியையே மாற்றியது பெரியார், அண்ணாவின் முழக்கம்!

இந்தியை எதிர்ப்பவர்கள் யார்? ஒரு ஈ.வெ.ராவும், ஒரு சோமசுந்தர பாரதியும்தான் இந்தியை எதிர்க் கிறார்கள். வேறு யாரும் இல்லை என்று சொன்னார். அப்போது எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர் பன்னீர்செல்வம். நான் சொல்லுகின்ற பன்னீர்செல்வம் வேறு. (பலத்த கைதட் டல்). நான் அடையாளம் காட்ட வேண்டுமென்பதற்காகச் சொல்லு கின்றேன். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். ஓமான் கடலிலே விமானம் விழுந்து தமிழர்களையெல்லாம் தவிக்கவிட்டு மறைந்தாரே அந்த பன்னீர்செல்வம் - அவர் 38ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். அவர்களைப் பார்த்து தான் மூதறிஞர் ராஜாஜி சொன்னார். நீங்கள் இந்தியை எதிர்க்கிறீர்கள். ஆனால் இந்தி எதிர்ப்பாளர்களாகிய உங்களுக்கு மெஜாரிட்டி கிடை யாது. ஒரே ஒரு ஈ.வெ.இராமசாமி பெரியாரும், இன்னொரு சோமசுந்தர பாரதியாரும் ஆக இந்த இரண்டு பேரும் தான் இந்தியை எதிர்க்கிறீர்கள். ஆகவே, நீங்கள் மைனாரிட்டி என்றார். உடனே, ஏ.டி.பன்னீர்செல் வம் எழுந்து சொன்னார். முதலமைச் சர் அவர்களே நான் சொல்வதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பேர் தான் இந்தியை எதிர்க் கிறார்கள் என்று கேலி செய்கிறீர்கள். ஆனால், இரண்டு பேர் எதிர்க்கிறார் கள் . அந்த இந்தியைக் கொண்டு வரு பவர் நீங்கள் ஒருவர்தான். இரண்டு பெரிதா? ஒன்று பெரிதா? என்று பார்த் தால் நீங்கள் மைனாரிட்டி. இரண்டு பேர் வேண்டாம் என்கிறார்கள் அவர் கள் மெஜாரிட்டி என்று சொன்னார். (பலத்த கைதட்டல்)

இவைகளெல்லாம் ஏட்டிலே பதி வானவை. சரித்திரக் குறிப்புகளிலே அழுத்தமாகப் பதிவு செய்யப்பட் டவை. இவைகளையெல்லாம் சொல் லுவதற்குக் காரணம். ராஜகோபாலாச் சாரியார் கட்டாய இந்தியை கொண்டு வந்தார். கட்டாய இந்தியை தமிழகத் திற்குக் கொண்டு வந்த அதே ஆச்சாரி யார், அண்ணாவினுடைய முழக்கத்தை, பெரியார் ஈ.வெ.ராவினுடைய முழக் கத்தையெல்லாம் கேட்ட பிறகு அவரே சொன்னார். இந்தி தமிழ்நாட்டிற்கு  ஆகாது. இந்தி நம்முடைய மொழி யாக, கட்டாய மொழியாக ஆக்கப்படு வதை நான் எதிர்க்கிறேன் என்று ராஜகோபாலாச்சாரியரே இந்தி எதிர்ப்பாளராக மாறினார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் 14 வயது வாலிபனாக அல்லது சிறுவனாக இருந்தபோது,  இந்தியைக் கொண்டு வந்த ராஜகோபாலாசாரியார் எனக்கு 50 ஆண்டுகாலமானபோது இந்தி வேண்டாம். இந்தியை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன் னார் என்றால், காஞ்சிபுரத்திலே இருக் கின்ற பிராமண நண்பர்களுக்கு , நான் ஞாபகப்படுத்துகின்றேன். ராஜாஜி யால் ஏற்றுக் கொள்ள முடியாத இந்தி- இந்தி வந்தால், தமிழர்கள் மூன்றாந்தர குடிமக்களாக ஆகிவிடுவார்கள் என்று உடனடியாக அதை எதிர்ப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தார் ராஜாஜி. இதுவே திராவிட இயக்கத்தினுடைய வெற்றியை உலகத்திற்கு அறிவிக்கின்ற ஒன்றாகும்.

நாம் சொல்லும்போது, சில பேருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். ஆனால் அனுபவத்திலே பார்த்த பிறகு தான், அவர்கள் சொன்னது சரிதானே என்று ஒத்துக் கொள்ளத் தோன்றும். இப்படித்தான் நாமெல்லாம் திரா விடர்கள் என்று சொன்னபோது, நாங்கள் திராவிடர்கள் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். இன்றைக்குக் காலையிலே கூட நான் ஒரு தொலைக்காட்சி சந்திப்பைக் கேட்டேன். அதில் நம்முடைய தம்பி சுப.வீரபாண்டியன், இன்னொரு தோழருடன் விவாதம் செய்தார்.

அந்த விவாதத்தில், திராவிடன் என்ற சொல்லை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சுப.வீர பாண்டியனுக்கு எதிராக அமர்ந்து வாதிட்டவர் குறிப்பிட்டார். ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று சுப.வீரபாண்டியன் கேட்டார். எங்கள் கட்சியிலே தீர்மானம் போட்டுவிட்டோம். திரா விட என்கின்ற அந்த சொல்லே கூடாது! என்று அவர் குறிப்பிட்டார். ஏன், திராவிட என்பது தமிழ் அல்லவா? தமிழன் ஒத்துக்கொள்ளாத சொல்லா? தமிழன் புறக்கணித்த சொல்லா?

திராவிடத்தினுடைய உயர்வை அறிஞர்கள் சொல்கிறார்கள் - சரித்திரம் சொல்கிறது!

இந்த ஊரிலே பிறந்த எங்களுடைய தலைவர் அண்ணாதான், திராவிட நாடு என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கியவர் (பலத்த கைதட்டல்) ஜஸ்டிஸ் கட்சியினுடைய நண்பர்கள் ஆதாரப்பூர் வமாக ஒத்துக்கொண்ட சொல் திராவிட என்பதாகும். திராவிட என்ற சொல்லே கிடையாது. அது யாரோ பெரியார் இராமசாமி விளித்த சொல். அது அறிஞர் அண்ணா கொண்டு வந்த சொல் என்று யாராவது சொல்லுவார்களேயானால், அவர்கள் தயவு செய்து இந்தியாவினுடைய தேசியப் பாடலை ஒருமுறை கேட்கட்டும். அல்லது படித்துப் பார்க்கட்டும்.

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.

இதிலே இடம் பெற்ற திராவிட எங்கிருந்து வந்தது? இந்தியாவினுடைய தேசியப் பாடல் இதுதான். அந்த தேசியக் கீதத்தில், திராவிட உத்கல வங்கா என்று வருகிறது. அதை ஏற்றுக் கொண்டு எழுந்து நின்று வணக்கம் செய்து மரியாதை செலுத்துகின்றவர்கள், திராவிட என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னால், அதை கேட்பவர்களுக்குப் பைத்தியமா? அல்லது சொல்லு கின்றவர்களுக்கு பைத்தியமா? என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெளிநாட்டிலே இருந்து தமிழகத்திலே வந்து, தமிழ் கற்ற வெள்ளைக்கார பாதிரியார்கள், கால்டு வெல் போன்றவர்கள் திராவிட என்ற சொல்லை ஏற்றுக் கொண்டவர்கள். திராவிடத்தினுடைய ஆழம் - அகலம் - உயரம் இவற்றையெல்லாம் ஆய்ந்து அறிந்த அறிஞர் பெருமக்கள். அதை வரலாறு நிரூபிக்கிறது. சரித்திரம் சொல்லுகிறது. அதை மறந்துவிட முடியுமா?

திராவிட என்ற சொல்லையே நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்தக் கட்சியில் திராவிட என்ற பெயர் இருந்தால், அவர்களோடு சேர மாட் டோம் என்று கூறுபவர்களுக்கு நான் சொல்லு கின்றேன். தயவு செய்து இந்த நாட்டுப்பாடல் மாத்திரமல்ல, அதோடு சென்னைக் கடற்கரையிலே இருக்கின்ற ஒரு கல்லூரி பிரசிடென்சி காலேஜ், மாநிலக் கல்லூரி. அந்த கல்லூரியினுடைய வாசலில் ஒரு சிலை இருக்கும். அந்த சிலையைக் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அதனுடைய அடிபீடத்தில், அந்தச் சிலையினுடைய பெயர் எழுதப்பட்டிருக் கிறது. டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் என்று பெயர் எழுதப்பட்டிருக்கிறது. எப்படி எழுதப்பட்டிருக் கிறது தெரியுமா? திராவிட வித்யாபூஷண டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் என்று எழுதப்பட்டிருக்கிறது. அங்கே திராவிட எப்படி வந்தது? சாமிநாதய்யர் என்றால் வரலாமா? சாமான்யன் கருணாநிதி என்றால் வராதா? வரும். ஏனென்றால், திராவிட என்பது ஒரு கலாச்சாரம். ஒரு இனம். ஒரு இனத்தினுடைய பண்பாடு. இவைகளெல்லாம் சேர்ந்ததுதான் திராவிட என்கின்ற சொல்லுக்கு விளக்கம். திராவிடர்கள் இந்த நாட்டினுடைய பூர்வீகக்குடிகள்.

இன்னும் சொல்லப்போனால், ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவிலே வாழ்ந்தவர்கள். ஆரியர்கள் இங்கே வந்து நுழைந்து திராவிடர்களை விரட்டினார்கள். என்றெல்லாம் வரலாறு இருக் கிறது. பள்ளிக்கூடத்திலே இருக்கின்ற வரலாறு களிலேகூட தெள்ளத்தெளிவாக இந்தச் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. எனவேதான், திராவிட இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்றெல்லாம்  அழைப்பது ஏதோ பெரியார் கண்டுபிடித்த வார்த்தை என்பதற்காக அல்ல. அண்ணா கண்டு பிடித்த வார்த்தை என்பதற்காக அல்ல. நம்முடைய முப்பாட்டான் காலத்திலேயிருந்து நாம் பழகி வருகின்ற வார்த்தை. ஒரு இனத்தின் பெயர். மான முள்ள ஒரு இனத்தின் பெயர். அதை மறந்துவிடக் கூடாது.

அந்த இனத்தின் சார்பாக நடைபெறுகின்ற எந்த இயக்கமானாலும், எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அதிலே திராவிடம் புழங்குவதற்குப் பெருமை கொள்ள வேண்டும்.

தமிழ் இனத்திற்கு அடிநாதமாக ஆணிவேராக இருப்பது திராவிட முழக்கம்!

திராவிட நாடு திராவிடருக்கே! என்று ஒரு காலத்திலே ஒலித்தோம். இப்பொழுது இந்தியா வினுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடு இவைகளை யெல்லாம் கருத்திலே கொண்டு, அண்ணாவினு டைய தீவிர சிந்தனைக்குப் பிறகு, அண்ணா அவர்களே கைப்பட எழுதிய அந்தப் புத்தகம், அவருடைய கையெழுத்தோடு கூடிய புத்தகம்; புத்தகம் முழுவதும் அச்சடிக்கப்பட்டதல்ல, அண்ணாவே எழுதி அப்படியே பிளாக் செய்த புத்தகம்; அதிலே அண்ணா திராவிட நாட்டைக் கைவிட்டுவில்லை. திராவிட இனத்தைக் கைவிட்டு விடவில்லை. நாம் திராவிட நாடு திராவிடருக்கே என்பதை கைவிட்டாலும், அந்த இனத்துக்கு உரியவர்கள் என்பதை அழுத்தந்திருத்தமாக அண்ணாவே சொல்லுகிறார். நான் அதைத்தான் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

திராவிட என்பது கற்பனைச் சொல் அல்ல. திராவிட என்பது நம்முடைய எழுச்சிக்கு, நம்முடைய இனத்தின் மானத்திற்கு  அந்த மானத்தைக் காப்பாற்ற நாம் கொண்டுள்ள உரமான கொள்கைகளுக்கு, உறுதியான இலட்சியங்களுக்கு அடிநாதமாக ஆணிவேராக இருப்பதுதான் திராவிட என்கின்ற அந்த முழக்கம்- திராவிட என்கின்ற அந்த வார்த்தை, அந்தச் சொல். (கைதட்டல்)

அந்த திராவிட என்பதை யார் எந்த இயக்கத் திற்கு இணைத்து வைத்துக் கொண்டாலும், நான் அவர்களை பாராட்டுகிறேன். நான் அவர்களை மதிக்கிறேன். ஆனால், திராவிட என்ற சொல்லை வைத்துக் கொண்டு திராவிடர் அல்லாதவர்களை மாத்திரமல்ல திராவிடர்களையே யாரும் ஏமாற் றாதீர்கள். இவர்களும் திராவிட என்று சொல்லு கிறார்கள் என்று நம்பி ஏமாந்து விடாமல் திரா விடர்களாகிய நீங்கள், தமிழ் மக்களாகிய நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். - இவ்வாறு கூறினார் கலைஞர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.