குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தால் திறன் குறையும்

கோலாலம்பூர், ஜன. 25- கோலாலம்பூரில் தொழில் துறை ஆராய்ச் சியாளர் டாக்டர் அபெத் ஆன் கூறிய தாவது: ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வ தால் மூன்று முக்கிய பிரச்சினைகளால் வேலைத் திறன் மற்றும் உற்பத்தி அளவு குறைகிறது. அவை முதுகுவலி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இரைச்சல் மற்றும் தசைப் பிடிப்பு ஆகும். இதில், முதுகு வலியால் பாதிக்கப்படுபவர் களுக்கு அதிக அளவில் வேலைத் திறன் குறைகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலிக்கு நிவாரணம் தேடி வயதானவர்கள் மட்டும் வருவதில்லை. தற்போது, இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். - இவ்வாறு அபெத் தெரிவித்தார். முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் சியோவ் யெவ் கூறுகையில், முதுகு வலிக்காக வருபவர்களில், சுளுக்கு என்று வரும் ஊழியர்கள் பலரும் அலுவலகத்தில் சீரற்ற இருக்கையில் அமர்ந்து வேலை செய்பவர்கள்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் முதுகுவலி ஏற்படுகிறது. அதனால், வேலைத் திறன் குறைய வாய்ப்புள்ளது என்றார். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்ற வேண்டியவர்கள், இடை யிடையே எழுந்து சென்று சில நிமிடங்கள் கழித்த பின்பு, மீண்டும் பணியை தொடர்ந்தால், முதுகு வலியைத் தவிர்க்கலாம்.