குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அமெரிக்கப் புலனாய்வை அதிரவைத்த வடகொரிய சனாதிபதியின் மரணம்!

22.12.2011-புலனாய்வாளர்கள் அதிர்ச்சி!!   வடகொரிய சனாதிபதி கிம் யோங் இல் சென்ற மார்கழி மாதம் 17  இன் திகதி மரணமடைந்ததாக கடந்த திங்கட்கிழமை அன்றே உத்தியோகபூர்வமாக வடகொரிய சனாதிபதி மாளிகை அறிவித்தது புலனாய்வு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் ,தமது இயலாமையையும் தோற்றுவித்துள்ளது. அதாவது அருகில் கண்ணில் எண்ணை ஊற்றியவாறு, அமெரிக்க செய்மதிகளின் ஆதரவோடும் வடகொரியா என்ன செய்கிறது என கண்காணிக்கும் தென்கொரிய புலனாய்வு வல்லுனர்களுக்கும் ,அமெரிக்க உளவு அமைப்புக்கும் தனது மரணத்தின் மூலம் 48  மணிநேரங்களை வடகொரிய கொடுத்திருந்தும் யோங் இன் இறப்பினை கண்டுபிடிக்க முடியவில்லை.

சனாதிபதி கிம் யோங் இல் பயணிக்கும் பிரத்தியோகமான ரெயினில் வைத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவரது உடல் சனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிம் யோங் இல் சனாதிபதியாக இருக்கும்போதே இருண்ட இடமாகவும் ,புலனாய்வு தகவல்களை இலகுவில் பெற்றுவிட முடியாததாகவே வடகொரியாவை வைத்திருந்ததார். ஆனால் இறப்பின் பின்னும் அவர் புலனாய்வு நிறுவனங்களுக்கு நன்றாகவே தண்ணி காட்டி உள்ளார்.

இதனிடையே இன்று தென்கொரியர்களால் இராட்சத பலூன்களில் பல்லாயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் வடகொரியாவை நோக்கி வீசப்பட்டன.ஒரு சனாதிபதி மரணமடைந்ததையே தெரியாமல் இருந்தவர்கள் துண்டு பிரசுரம் வீசி என்ன பயன்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.