குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தமிழக உரிமையை விட்டுத் தர முடியாது- 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.

15 .16.12.2011  முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலை நாட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் யெயலலிதா முல்லை அணை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் தேவை என்றும். எதிர்காலத்தில் 152 அடியாக உயர்த்த அணையை தமிழகம் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கேரளம் தடையாக இருக்கக் கூடாது என்றும். தமிழக உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் தீர்மானத்தை  கொண்டு வந்தார் தமிழக முதல்வர். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கேரளத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள்- தமிழகம் திரும்பினர்.
15 .16.12.2011  நெடுங்கண்டம் பகுதியில் காரித்தோடு, கரியன்மலை பகுதியில் வசித்து வந்த 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்
கேரள அரசு பெரியார் அணை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து விட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த மலையாளிகள் இடுக்கி பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களை தாக்கி துரத்தியடித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கேரள அரசை எதிர்த்து ஊர்வலமாக சென்றனர்.இதனால் அதிருப்தியும், கோபமும் அடைந்த கேரள மாநிலத்தினர், அப் பகுதியில் வசிக்கும் தமிழர்களைக் கடுமையாகத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.மேலும், தமிழர்களுக்குப் பணி வழங்கவும் பல கேரள எஸ்டேட் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். தங்கள் எஸ்டேட்டுகளிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பலர், தமிழகப் பகுதிகளுக்குள் தப்பி வந்துள்ளனர்.
 
நெடுங்கண்டம் பகுதியில் காரித்தோடு, கரியன்மலை பகுதியில் வசித்து வந்த 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக குதிரைப் பாதை, சாக்குலத்து மெட்டு, ராமக்கல் மெட்டு மலைப் பாதைகள் வழியாக தப்பி சங்கராபுரம், கோணாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு உறவினர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.இவர்களில் பலர் மாணவர்கள். கேரளத்தில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.இந்த மாணவர்கள் நெடுங்கண்டம் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். விரட்டியடிக்கப்பட்டதால், தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.மேலும், தமிழர்களுக்கு மருத்துவ வசதியோ, உணவுப் பொருள்களோ கேரளத்தவர்கள் வழங்க மறுப்பதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கும் மறுக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே, உடும்பஞ்சோலை பகுதியில் உள்ள கஞ்சிகலையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் (மொத்தம் 11 பேர்) போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தஞ்சமடைந்தனர்.
 


தமிழகத்தில் தாக்குதல் தொடர்கிறது.
..........................................................
இந்நிலையில் கோவை, தஞ்சை, மதுரை, தேனி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மலையாளிகளுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தஞ்சையில் முத்தூட் நிறுவனத்தின் நிதி நிறுவனத்தை சிலர் மூடச் சொன்னனர் அவர்கள் போலீசார் பாதுகாப்புக்  கொடுப்பார்கள் என்று கடையைத் திறந்தனர். சிறிது நேரத்தில் அந்தக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. அது போல கோவை உள்ளிட்ட பல் வேறு இடங்களில் கடைகள் நொறுக்கப்பட்டன.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.