குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

மார்க்ஸ்சிஸ்ட் cpi (m) கட்சியின் போலி முகம் - டி.அருள் எழிலன்

09 .12. 2011 -கடந்த மூன்று நாட்களாக தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு பதிலடியாக தமிழகத்தில் உள்ள கேரளத்தவர்களுக்கு எதிரான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பரவலாக தாக்கப்பட்டிருக்கின்றன. கேரள எல்லையோரப் பகுதிகளான கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு போடும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. தமிழர்கள் தாக்கப்பட்ட போது அமைதியாக இருந்த சிபிஎம் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகள் தமிழகத்தில் சில தாக்குதல் நடந்தவுடன் இனவாதம் என்ற கூச்சலை உயர்த்தியுள்ளனர். உணர்ச்சிகரமான இந்த அரசியல் நெருப்பு முதன் முதலாக கொளுத்தப்பட்டது கேரளாவில் இருந்துதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஆனால் பேசத் தயங்குகின்ற ஒன்றாகும். 2010ஆம் ஆண்டில் சிபிஎம் கட்சி ஆளும் கட்சியாக இருந்து அதன் முதல்வராக அச்சுதானந்தன் இருந்த போதுதான் இந்த பிரச்சனை பூதாகரமாக எழுப்பப்பட்டது. முல்லை அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் படங்களை முதல்வரே வெளியிட்டு மலையாளிகளிடம் இன வெறியைத் தூண்டினார் அப்போதெல்லாம் தமிழகம் அதை கண்டு கொள்ளவில்லை. அப்போது அதற்கு மலையாளிகளிடமே சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பார்த்த வரவேற்பு இல்லை. கேரளாவைச் சார்ந்த சில அறிவுஜீவிகள் முல்லைப் பெரியாறு அணையில்  தமிழக விவசாயிகளின் நியாங்களைப் பேசினார்கள். அவர்கள் சிபிஎம் கட்சியின் ரௌடிகளால் தாக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. முல்லைப் பெரியாறு அணையை முன் வைத்து இன வெறியைத் தூண்டுவதில் அச்சுதானந்தனுக்கும், காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டிக்கும் தனிப்பெரும் போட்டியே நடந்தது. அந்தப் போட்டியில் இப்போது உம்மன் சாண்டி எங்கே வென்று விடுவாறோ என்ற கவலையில் என்ன விதமான கீழ்த்தரமான இனவாதியாகவும் தான் மாறுவேன் என்பதை நிரூபித்திருக்கிறார் அச்சுதானந்தன். அச்சு, உம்மன்சாண்டியின் மலையாள இன வெறியைப் புரிந்து கொள்ள சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த கேரள சட்டமன்ற இடைத் தேர்தலையையும் அதன் முடிவுகளையும் புரிந்து கொண்டால் மட்டுமே இன்றைய பிரச்சனையில் அச்சு, உம்மன் சாண்டிக்கு வந்துள்ள ஆர்வம் புரியும்.

இனவெறியின் பின்னணி.

கேரளாவில் ஒட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 140 பெரும்பான்மை பெற்று ஒரு கட்சி ஆட்சியமைக்க 71 சீட்கள் தேவை என்கிற நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. முன்னர் ஆட்சி செய்த அச்சுதானந்தன் தலைமையிலான சிபிஎம் கூட்டணிக்கோ 68 தொகுதிகள் கிடைத்து எதிர்கட்சியானது. காங்கிரஸ் கட்சியின் இந்த நூலிழை மெஜாரிட்டிக்கு காரணம் கேரள காங்கிரஸ் (ஜே) கட்சி வேட்பாளர் ஜேக்கப்பும் ஒரு காரணம். அவரையும் சேர்த்துதான் காங்கிரஸ் கட்சிக்கு 72 தொகுதிகள். இந்நிலையில் ஜேக்கப் கடந்த அக்டோபர் மாதம் இறந்தார். முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பிறவம் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனவரி மாதம் வரவிருக்கும் நிலையில் நூலிழையில் ஊசலாகிக் கொண்டிருக்கும் மெஜாரிட்டியை தக்கவைக்க உம்மன்சாண்டிக்கு பிறவத்தில் வென்றாக வேண்டிய நிர்பந்தம்.காங்கிரஸ் தோற்றால் ஒரு சில எம்.எல்.ஏக்களை வாங்கி ஒன்றிலோ ஆட்சியமைக்கலாம். அல்லது மறு தேர்தல் வந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது அச்சுதானந்தனின் ஆசை. இந்த இரண்டு பதவி வெறி படித்த இன வெறியர்களும் சேர்து வென்றே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் ஊதி விட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை உடையப்போகிறது என்ற வதந்தி. ஆரம்பத்தில் சில அறிக்கைகள் வெளியிட அதற்கு போதுமான  ஆர்வம் இல்லாத நிலையில், ‘ டேம் 999’ படத்தை வெளியிட்டு அதை தமிழகத்தில் எதிர்த்தவுடன் அதை வைத்தே பிரச்சனை ஊதி விட்டார்கள் அச்சுதானந்தனும், உம்மன்சாண்டியும். இப்போது கேரளம் முழுக்க அனைத்து தொழிற்சங்கங்களும், குறிப்பாக வலுவாக இருக்கும் இடதுசாரி தொழிற்சங்கங்கள்தான் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை வேண்டும் என்று போராடுகின்றன. கோழிக்கோடு, கோட்டயம், கொச்சின், உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஜவுளிக்கடைகள்,வர்த்தக நிறுவனங்களை மாலை மூடிவிட்டு வீதிக்கு வந்து போராடுவதை தேச சேவை போல நினைத்து மலையாளிகள் தினம் தோறும் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் அவர்கள் தமிழர்களின் கடைகளையும் தாக்குகிறார்கள். இடுக்கி அணையை ஒட்டிய பகுதிகளில் ஒரே வதந்தியாம். அணை இன்று உடையப் போவதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சில சிபிஎம் கட்சியினரே துண்டு நோட்டீஸ்களை விநியோகிக்கிறார்கள். அப்பகுதி மக்கள் இரவு முழுக்க தூங்காமல் இருக்கும் அளவுக்கு நிலைமை கெட்டுப் போயுள்ளது. பிறவம் இடைத்தேர்தல் முடிந்து இரண்டு இனவெறியர்களில் எவராவது ஒருவர் வென்ற பின்னரே இந்த பதட்டங்கள் முடிவுக்கு வரும் என்கிறார்கள் கேரளாவைச் சார்ந்த சில ஊடக நண்பர்கள்.

 அணை உடையாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

வெறும் 150 கன அடி தண்ணீர் தேக்கும் மிகச்சிறிய முல்லைப் பெரியாறு அணை. எஞ்சிய நீரைச் சேர்க்க பேபி அணை. அதையும் தாண்டி முல்லைப் பெரியாறில் இருந்து வரும் தண்ணீரை தாங்கிக் கொள்ளும் பிரமாண்டமான இடுக்கி அணை. முல்லைப் பெரியாறு அணையைப் போன்று பல மடங்கு பெரிதான இடுக்கி அணையை மனதில் கொண்டே கட்டப்பட்டது  முல்லைப் பெரியாறு அணை. 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் தேக்கும் பிரமாண்ட இடுக்கி உடையாது அதோடு ஒப்பிடும் போது கொசுறு போன்றிருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடையும் என்பதுதான் கேரள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினரின் கருத்து. உண்மையில் இன்று அப்பாவி  மலையாள மக்களிடம் அச்சத்தை உருவாக்கியதன் விளைவாய் அது வெகு மக்களின் உணர்ச்சிவயப்பட்ட தாக்குதலாக வெளிப்பட்டது தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன, ஐய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழக தோட்டத் தொழிலாளிகள் சிறைவைக்கப்பட்டார்கள், தமிழக பெண்கள் மீது பாலியல் வசவுகள் பொழியப்பட்டன, இது தமிழ் தேசியவாதிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. கேரளாவில் தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆர்.எஸ். எஸ், போன்ற இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களும் ஆவார்கள்.நிலமை கையை மீறிச் சென்ற நிலையில் முதல்வர் உம்மன்சாண்டி அமைதி காக்குமாறு கோரிக்கை வைத்தார். அச்சுதானந்தனோ முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பதட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இதுதான் சிபிஎம் கம்யூனிஸ்டுகளின் அரசியல் யோக்கியதை.

 தமிழகத் தாக்குதல்கள்.
பரவலாக தமிழகம் முழுக்க பல லட்சம் மலையாளிகள் வசிக்கின்றனர். குமரி, கோவை, இந்த இரண்டு பகுதிகளில் அதிகமாகவும், ஏனைய பகுதிகளில் ஓரளவுக்கும் வாழ்கிறார்கள். தமிழகம் முழுக்க குறிப்பாக பெரு நகரங்களில் தேநீர் கடைகளை மலையாளிகள் நடத்தி வருகின்றனர். பிரமாண்டமான வணிக நிறுவனங்களையும் நடத்துகின்றனர். அது போல கேரளாவில் தமிழர்களும் வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கொல்லம், திருவனந்தபுரம். போன்ற பகுதிகளில் அடர்த்தியாக தமிழர்கள் வாழ்கின்றார்கள். இம்மாதிரியான நிலையில் கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக தமிழகத்தில் இன்று கேரளத்தவர்களால் நடத்தப்படும் வணிக நிறுவனங்களில் சிலர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். உடனே சில சிபிஎம் அறிவு சீவிகள். இதை இனவாதத் தாக்குதல் என்று பிரச்சாரப்படுத்த துவங்கியிருக்கிறார்கள். முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அறிவு ஜீவிகள் தமிழத்திலும் சில எதிர்வினைகள் உள்ளன என்பது தெரிந்தவுடன் தங்களின் கட்சி விசுவாசத்தை காட்டத் துவங்கி விட்டனர். இவர்கள் ஈழப் படுகொலைகளின் போது அங்கு படுகொலையே நடக்கவில்லை என்று பேசியவர்கள், போருக்கு எதிரான தமிழக போராட்டங்களை தமிழ் பாசிசம் என்று பிரச்சாரம் செய்தவர்கள். இவர்களே இப்போது முல்லைப் பெரியாறு அணை விவாகரத்திலும் இனவாதம் என்று முத்திரை குத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் கேரளாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாக இங்குள்ள மலையாளிகளின் வர்த்தக நிறுவனங்களைத் தாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த பிரச்சனையை கேரளாவில் எரிய விட்டவர்கள் சிபிஎம் கம்யூனிஸ்டுகளே. அவர்கள் தமிழக மக்களுக்கு எதிரானவர்கள். ஈழப்படுகொலையை மறுத்து போரை ஆதரித்தவர்கள், கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என்று அந்த மக்கள் போராடுகிறார்கள். சிபிஎம் கட்சியோ அணு உலை வேண்டும் என்கிறது. தூக்குத் தண்டனை வேண்டாம் என்று நாம் போராடுகிறோம். சிபிஎம் கட்சியோ தூக்குத் தண்டனையை ஆதரிக்கிறது. காங்கிரஸ், பிஜேபி, போன்ற வலதுசாரிகளிடமிருந்து இவர்கள் எங்கே வேறுபடுகிறார்கள்?  தமிழகத்தில் வாழும் மலையாளிகளை விட அதிக ஆபத்தானவர்கள் தேசியக் கட்சிகளைச் சார்ந்த இவர்களே. இவர்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டிய சரியான தருணம் இதுதான்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.