குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

அமெரிக்கப் படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க பாக். ராணுவத்திற்கு தளபதி கயானி உத்தரவு

08.12.2011-அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.