குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

உயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா?:

08.12.2011-வழக்கறிஞர் மறுப்பு2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, யாமீன் கோராமல் இருப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை அவரது வழக்கறிஞர் சுகில் குமார் மறுத்துள்ளார். இந்த வழக்கில் ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, மூத்த தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கனிமொழி, சரத்குமார், ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, சினியுக் நிறுவன அதிபர் கரீம் மொரானி மற்றும் 5 தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் உள்பட 12 பேர் அடுத்தடுத்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

ராசா, தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளான சித்தார்த் பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மட்டுமே சிறையில் உள்ளனர். இதில் சந்தோலியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதை டெல்லி உயர் நீதிமன்றம் இதில் தானாகவே தலையிட்டு ஜாமீனை நிறுத்தி வைத்தது. ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த ஜாமீன் உறுதி செய்யப்படுமா என்பது நாளை டெல்லி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொருத்தது.

இந்த வழக்கில் கைதான 14 பேரில் இதுவரை ஜாமீன் மனுவே தாக்கல் செய்யாதது ராசா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால், பாதுகாப்புக்காகத் தான் அவர் ஜாமீனே கோரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை அவரது வழக்கறிஞர் சுகில்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், நானும் கூட இந்தக் கதைகளைக் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தச் செய்திகளில் உண்மையில்லை, அது வெறும் புரளி தான்.

அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு சரியான நேரத்துக்காக காத்திருக்கிறார். சித்தார்த் பெகுரா ஜாமீன் கோரி மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைப்பதை பொறுத்து அடுத்து ராசா மனு தாக்கல் செய்வார்.

ராசா, பெகுரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வெவ்வேறானவை. என்றாலும் அவரது ஜாமீன் மனு மீது என்ன தீர்ப்பு வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதுவரை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யுமாறு ராசாவுக்கு எந்த யோசனையும் நான் தர மாட்டேன் என்றார்.

அமெரிக்கப் படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க பாக். ராணுவத்திற்கு தளபதி கயானி உத்தரவு

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.

நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.