குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

இளமையை தக்கவைக்கும் தூதுவளைப் பூக்கள்! மகளிரின் நோய்களுக்கானஅருமருந்துவில்வம் நாய்கடிக்குமருந்தாகும்

25.11.2011- ஊமத்தைச் செடிபால்வினை நோய் போக்கும் வெள்ளெருக்கு.....கணீரென்ற குரல் வேண்டுமென்றால் தூதுவளை தாவரத்தை பறித்து கசாயம் செய்து உட்கொள்வர். அதற்கு மாற்றாக இப்பொழுது தூதுவளை சாக்லேட் விற்பனைக்கு வந்து விட்டது. இருந்தாலும் இயற்கைக்கு ஈடாகுமா? தூதுவளை செடியைப் போல தூதுவளை பூக்களும் உடலுக்கு நன்மை தரும் மருத்துவ குணம் கொண்டதாகும். சித்தமருத்துவத்தில் தூதுவளையின் பங்கு முக்கியமானது. இது காயகல்ப மருந்து என்று அழைக்கப்படுகிறது.

இளமையை தக்க வைக்க

வயதானலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தூதுவளைப் பூக்கள் வரப்பிரசாதமாகும். தினம் இரண்டு பூக்களை எடுத்து மென்று தின்று வர உடல் பளபளப்பாக மாறும். என்றும் இளமை நீடிக்கும்.
மூலிகையான தூதுவளையின் இலை, வேர், மலர், கனிகள் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.
உடலை பாதுகாக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும் உதவக்கூடிய காயல்கல்ப மூலிகைகளை சித்தர்கள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தும் விதம் பற்றி ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்துள்ளனர்.

மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது அவற்றுடன் உலோக பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்தி பத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயகல்ப மூலிகையாக தூதுவளை போற்றப்படுகிறது. தரிசு நிலங்களிலும், நீர் அதிகம் தேங்கும் பகுதிகளிலும் வளரும் மூலிகையான தூதுவளையின் இலை, வேர், மலர், கனிகள் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து சொலசோடைன்,டோமடிட், சொலமரைன் போன்ற வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

இலைகள் கசப்பானவை, இருமல் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. வேரின் கசாயம் காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்துகிறது. முழுத்தாவரமும் ஆஸ்துமா, தொடர்ந்த மூச்சுக்குழல் அழற்சி, இருமல், காய்ச்சல், மற்றும் குழந்தைப் பேறு மருத்துவத்தில் பயன்படுகிறது.

தைராய்டு கட்டிகள்

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது.. குளிர் காலங்களில் சளித்தொல்லை அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு ஏற்படும். இவற்றை நீக்குவதில் தூதுவளை அருமருந்தாகப் பயன்படுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்

நினைவாற்றல் பெருகும்

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

புற்றுநோய் குணமடையும்

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய நேரிட்டால் தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம்

தாம்பத்ய உறவு மேம்படும்

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும். தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

பால்வினை நோய் போக்கும்

கனிகளின் வடிநீர் அல்லது கசாயம் மிகுந்த பயன் உடையவை. சிறுநீர் உறுப்புகளில் கல் நீக்கவும், கோனேரியா பால்வினை நோய் போக்கவும், கீழ்வாதம் நீக்கவும், மலடு போக்கவும் பயன்படுகிறது. இவைமட்டுமின்றி சிறுநீரக கோளாறுகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்பும் நோயினை போக்கவும் உதவுகிறது. சம அளவு விதைகளை ஆட்டுப்பால், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.உலர்ந்த கனிகள் பால் உணர்வு தூண்டுவி. சிறுநீர் போக்குத்தூண்டுவி. வலுவேற்றியாக செயல்படும்.

மலட்டுத்தன்மை நீங்கும்

நெருஞ்சில் செடியின் காய் மிருதுவானது. முட்கள் கெட்டியாக இருப்பதில்லை. கனிந்தபின் கடினமாகி முட்களாக மாறிவிடும். இடம் பரவ ஏதுவாக அமைகிறது.

தசமூலா எனும் ஆயுர்வேத தயாரிப்பில் நெருஞ்சில்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. நெருஞ்சித்தாவரத்தை முழுவதுமாக தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தினாலும் மலடு நீங்கும்.

பால்வினை நோய் போக்கும் வெள்ளெருக்கு

தரிசு நிலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும் வெள்ளெருக்கு புதர்செடி வகையைச் சேர்ந்தது. கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிற மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. இந்த செடியின் இலைகள், மலர்கள், லேடக்ஸ்பால், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

இலைகளின் பொடியை எண்ணெயில் கொதிக்க வைத்து தோல்வியாதிகள், படை, கொப்புளங்களுக்கு பூச்சாகப் பயன்படுகிறது. வதக்கிய இலைகள் வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுக்களின் மேல் வைத்து கட்டப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

எருக்கின் மருத்துவ குணங்களின் அடிப்படையாக உள்ள சைகுளோ சேடால், புரோசெஸ்டிரால், கலோடிரோஃபின், கைகேன்சியோல் சைரியோ ஜெனின் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

பால்வினை நோய்கள் தீரும்

இலைகளின் கலவை காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. வெள்ளைநிறப் பால்போன்ற லேடக்ஸ் கருச்சிதைவினை தூண்டக்கூடியது. சிறுகுச்சியினை லேடக்ஸ் பாலில் தேய்த்து கருப்பை வாயில் தடவினால் கருப்பை சுருக்கம் அடைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது.

மலர்கள் ஜீரணத்தை தருபவை, வயிற்று வலியினை போக்கக் கூடியவை. பசியின்மை, ஆஸ்துமா, சளி, இருமல் ஆகியவற்றினை போக்கும் திறன்கொண்டவை. உலர்த்தப்பட்ட மலர்கள் சர்க்கரையுடன் சேர்க்கப்பட்டு தொழுநோய், பால்வினை நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.

வேர்ப்பட்டை

வேர்ப்பட்டை உடலின் சுரப்பிகளை ஊக்கப்படுத்தும். தோல்வியாதிகள், யானைக்கால் வியாதி, அடிவயிறு வீக்கம், வயிற்றுப் புழுக்கள், தோலடி நீர்கோர்வை ஆகியவற்றிர்க்கும் மருந்தாகிறது. வேர்ப்பட்டையின் மேல் உள்ள கார்க் போன்ற பகுதியைப் பிரித்தெடுத்துவிட்டு பட்டையினை அரைத்து பழைய கஞ்சியுடன் பசையாக்கி யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட கால் மற்றும் விரைப் பகுதிகளின் மீது தடவப்படுகிறது.

வேர்ப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தொழுநோய், பால்வினை நோய், பால்வினை நோயின் புண்கள், வயிற்றுப்போக்கு, நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்தும். பால்போன்ற சாறு தலையின் படை மற்றும் மூல வியாதியினை போக்கும். தேனுடன் கலந்து வாய்ப்புண்ணுக்கும், பஞ்சில் தோய்த்து சொத்தை பல் வலிக்கும் மருந்தாகப் பயன்படு்ததப்படுகிறது.

மஞ்சள் காமாலை குணமாகும்

வேர்ப்பட்டையின் பொடி வாந்தியினைத் தூண்டக்கூடியது. நாள்பட்ட மூட்டுவலிக்கு, மஞ்சள் காமாலைக்கு மிளகுடன் சேர்த்து இருவேளை கொடுக்கப்படுகிறது. பால் திரிந்தபின் மேலே காணப்படும் நீருடன் சோடியம் கார்பனேட் கலந்து கொடுக்கப்பட்டால் ஒரே வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருந்து தயாரிப்பதற்கு மிக வயதான தாவரத்தின் வேரினை வெப்பமான அல்லது உலர் காலத்தில் பிரித்தெடுக்க வேண்டும். வேரினை தோண்டியதும் பட்டையினை பிரித்தெடுக்காமல் ஒரு நாள் கழித்தே எடுக்க வேண்டும். வேர்ப்பட்டை தூளினை தயாரிப்பதற்கு முன் பட்டையின் மேல் புறத்தில் உள்ள தடித்த கார்க் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்துவிட வேண்டும்.

மகளிரின் நோய்களுக்கான அருமருந்து வில்வம்

வறண்ட மலைப்பிரதேசங்களிலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வில்வமரம், இந்துக்களில் சைவ சமயத்தவர்கள் புனிதமாக வழிபடுகின்றனர். சிவபூஜையில் வில்வ இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிவன் துதியில் “ ஏக வில்வம் சிவா அர்ப்பணம் ” என கூறப்பட்டுள்ளது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தின் பல முக்கிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அமினோ அமிலங்கள், டிக்டஅமைன், மார்மெசின், மார்மின்,அம்பெல்பெரோன், மர்மிலோசின், ஏஜிலைன், ஆந்த்தோகயனின், ஃபிளேவன், குளுக்கோசைட்டுகள், பால்மிடிக் லினேலெயிக் ஒலியிக் அமிலங்களும் உள்ளன.

மனஉளைச்சல் நீக்கும் வில்வம்

இலைகள், பட்டை, வேர் மற்றும் கனிகள் மருத்துவப்பயன் உடையவையாகும். இலைகள் ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் சளி போக்கும். பட்டை இதயத்துடிப்பு, விட்டுவிட்டு வரும் காய்ச்சல் மன உளைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.

“தசமூல” என்னும் முக்கிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் வில்வ வேர் முக்கிய பங்காற்றுகிறது. இது பசியின்மை மற்றும் மகப்பேறுக்கு பின் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

அஜீரணம் போக்கும்

கனிகள் முக்கிய உறுப்பு ஆகும். உடல்நலம் தேற்றும். குளிர்ச்சி தரும். வைட்டமின் சி நிறைந்தது. ஊட்டம் தருவது. மலமிளக்கி, தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ந்த வயிற்றுப்போக்கு, அஜீரணம், ஆகியவற்றினை தீர்க்கும். வலுவேற்றியாகவும் உதவுகிறது. காய் தசை இறுக்கும் தன்மை கொண்டது. விதைகள் மலமிளக்கி, மலர்கள் வயிற்றுப்போக்குக்கு எதிரானது. வாந்தியை நிறுத்துகின்றன.

நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி


இந்தியா முழுவதும் தரிசு நிலங்களிலும், ரோடு ஓரங்களிலும் காணப்படும் ஊமத்தைச் செடிகள் பெரிய இலைகளுடன், புனல் வடிவ மலர்களை கொண்டவை. முட்டை வடிவில் காணப்படும் கனிகள் முட்களால் மூடப்பட்டிருக்கும். விஷச்செடி என்பதால் ஊமத்தைச் செடியை யாரும் விரும்புவதில்லை. இது நச்சுத்தன்மை பொருந்தியது என்றாலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

ஊமத்தைச் செடியில் இரண்டு வகை உண்டு. ஒருவகை ஊமத்தம் செடி யின் இலைக் காம்பு இலை நரம்பு ஆகியவை பச்சை வண்ணத்திலும் மற்றொரு வகையான கரு ஊமத்தம் செடிஊதா வண்ணத்தில் அதாவது வயலெட் வண்ணத்தில்இருக்கும்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தின் சக்தி மிகுந்த ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், ஸ்டிராய்டல், லேக்டோன்கள், வித்தனோலைடுகள், கௌமரைன்கள் மற்றும் டேனின்கள் உள்ளன. இச்செடியில் இருந்து ஹயோஸ்கைமைன், ஹயோஸசின்,டாடுரின், ஆகிய அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அட்ரோபா பெல்லடோனா தாவரத்தில் உள்ளது போல பிரித்தெடுக்கப்படுகின்றன.

உடைந்த எலும்பை ஒன்றாக்கும்

ஊமத்தைச் செடியின் இலைகள், வேர் மற்றும் விதைகள் மருந்தாக பயன்படுகின்றன. இலைகள் வலிபோக்குவன; கிருமிகளுக்கு எதிரானது. தலை அரிப்பை போக்குவது, போதை தருவது. பூக்கள் ஆஸ்துமாவிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.

கரு ஊமத்தைச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து சாறெடுத்து சாற்றுக்கு சம அளவில் பச்சைக் கற்பூரம், சம அளவு பசுவெண்ணெய் ஆகியவை கலந்து வைத்துகோள்ளவேண்டும். கால் கைகளில் அடிபட்டு வீக்கம், சுளுக்கு, தசைப் பிடிப்பு இவற்றின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும். உடைந்த எலும்பு ஒன்றுசேரும்.

வெறிநாய்க் கடிக்கு மருந்து

இந்திய மருத்துவத்தில் இது அபினுக்கு மாற்றாக பயன்படுகிறது. இலையின் சாறு கோனேரியாவுக்கு தயிருடன் கலந்து தரப்படுகிறது. வெறிநாய்க்கடியான ஹைட்ரோஃபோபியாவிற்கும் மருந்தாகிறது.

விதைகள் மற்றும் வேர் வயிற்றுப் போக்கு தடுப்பது; காய்ச்சல் போக்கும். கிருமிகளுக்கு எதிரானது. தோல் வியாதிகளை குணமாக்கும்.

விதைகளுக்கு கூடுதலான போதை தரும் சக்தி உள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

தூதுவளைப் பூக்களை 15 எடுத்து 200 மில்லி லிட்டர் நீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி பாலும் சர்க்கரையும் கலக்கிப் பருகினால் முக அழகு கிடைக்கும்.

உடல் வலுவடையும்

தூதுவளைப்பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல செய்து சாப்பிட ருசியாக இருக்கும், உடல் வலுவடையும். தூதுவளைப் பூக்களைச் சேகரித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து இரவில் ஒருவேளை மட்டும் அருந்தவும். இதனால் நரம்புகள் இறுகும். உடல் உறுதி பெறும். ஆண்மை பெருகும்.

 

அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்  அகத்திக் கீரையை யாரும் எளிதில் உண்பதில்லை. ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் இருப்பதனால் உணவில் சேர்த்துக்கொள்ளப் பயப்படுகின்றார்கள்.

ஆனால் இந்த அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும்.

வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.

மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.

அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.

இனி ஒவ்வொரு கிழமையும் அகத்திக் கீரை உண்டு வாருங்கள் எளிதில் உங்கள் வருத்தங்கள் குணமடையும்