குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 9 ம் திகதி வியாழக் கிழமை .

உலகிலேயே மிகப் பெரிய நகரம் எது?மும்பையா ?டோக்கியோவா?கவாய்தீவிலுள்ள கானலூலு வா?

21.11.2011.திருவள்ளுவராண்டு-2042-சிக்கலான கேள்வியாக இருந்தாலும், உலகிலேயே மிகப் பெரிய நகரம் ஹானலூலுதான். ஹவாய் நாட்டு சட்டத்தின் மூலம் 1907 இல் ஹானலூலு மாவட்டமும், நகரமும் (இரண்டும் ஒன்றே) உருவாக்கப்பட்டன.   இந்த மாவட்டத்தின் முக்கிய தீவான ஓஹூ மட்டுமன்றி, எஞ்சியிருக்கும் 2400 கி.மீ. (1,500 மைல்) தூரம் பசிபிக் பெருங்கடலில் பரவலாக அமைந்திருக்கும் வடமேற்கு ஹவாய் தீவுகள் அனைத்தையும் உள்ளடக்கியது இந்த மாவட்டம். இதன் பொருள் என்னவென்றால் வேறு எந்த நகரத்தையும் விட மிகப்பெரிய 5,509 சதுர கி.மீ. (2,127 சதுர மைல்) கொண்ட நிலப்பரப்பைக் கொண்டதாக ஹானலூலு இருக்கிறது என்பதுதான். என்றாலும் அதன் மக்கள் தொகை 876, 156 மட்டுமே. இந்த நகரத்தில் 72 விழுக்காடு  பரப்பு கடல்நீரில் மூழ்கியுள்ளதாகும். இந்த உலகின் அதிக மக்கள் தொகை உள்ள நகரம் மும்பையாகும். இங்கு 128 லட்சம் மக்கள் 440 சதுர கி.மீ. (170 சதுர மைல்) பரப்பில் வாழ்கின்றனர். ஒரு சதுர கி.மீ. பரப்பில் 29,024 பேர் வசிப்பது மிகவும் வியப்பிற்குரியதாகும். மொத்த பெருநகரப் பரப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் டோக்கியோவாகும். இங்கு 352 லட்சம் மக்கள் 13,500 சதுர கி.மீ. (5,200 சதுர மைல்) பரப்பில் வாழ்கின்றனர்.

ஹவாய் நாட்டின் தலைநகரம் ஹானலூலு ஆகும். ஆனால் அந்த நகரம் ஹவாய் தீவின் மீது இல்லை; ஓஹூ தீவின் மீது அமைந்துள்ளது. ஓஹூ தீவு ஹவாய் தீவை விடச் சிறியதானாலும், அதை விட அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டது. உலகிலேயே அதிக அளவில் மக்கள் தொகை சிதறிக் கிடக்கும் நாடு ஹவாய்தான். ஹவாய்த் தீவுக் கூட்டத்தின் ஆர்ச்சிபெலாகோ தீவுகள் உலகின் மிகப்பெரிய மலைத் தொடரின் முனையில் அமைந்துள்ளன. காபி பயிரிடும் ஒரே அமெரிக்க நாடு ஹவாய்தான். உலகில் பயிரிடப்படும் பைனாப்பிள்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை ஹவாயில் விளைவதுதான். உலகிலேயே அதிக அளவில் டின்களில் விற்கப்படும் கொத்துக்கறியை உண்பவர்கள் ஹவாய் மக்களே. ஓராண்டில் 70 லட்சம் டின் கறியை உண்கின்றனர்.

இந்த டின்களில் விற்கப்படும் கொத்துக்கறி இங்கு மிகவும் புகழ் பெற்றதாகும். போரின்போது இப்பகுதியில் ராணுவ வீரர்கள் அதிகமாக இருந்தது அதன் காரணமாக இருக்கலாம். மேலும் புயலடிக்கும்போது இவ்வாறு டின்களில் அடைக்கப்பட்ட கறி கைக்கு அடக்கமாகப் பயன்படும். இந்தக் கொத்துக்கறியுடன் சேர்த்து வறுக்கப்பட்ட சோறு ஹவாயின் சிறப்பு உணவாகும். 1778 இல் கேப்டன் குக் இந்த ஹவாய்த் தீவுகளைக் கண்டுபிடித்தார். தனது பயணத்திற்கு பொருளுதவி செய்த சாண்ட்விச் பிரவுவின் நினைவாக அத் தீவுகளுக்கு சாண்ட்விச் தீவுகள் என்று குக் பெயரிட்டார். 1779 இல் ஹவாயிலேயே குக் கொலை செய்யப்பட்டார்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத் தீவுகள் ஹவாய் சாம்ராஜ்யம் என்றே அறியப்பட்டிருந்தன. 1900 இல் இது அமெரிக்க அய்க்கிய நாட்டு எல்லைக்குள், அதன் 50 ஆவது மாகாணமாக சேர்ந்தது என்றாலும், இன்னமும் தங்களின் யூனியன் ஜாக் கொடியையே அது பயன் படுத்தி வருகின்றது.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

இந்தோனேசியா பாலி தீவில் அதிபர் ஒபாமாவுடன் மன்மோகன்சிங் சந்திப்பு அணு ஒப்பந்தத்தை அமல்படுத்த ஆலோசனை


பாலி, நவ. 18- இந்தோனேசியாவில் உள்ள   பாலி தீவில் இந் தியா,  ஆசியான் மாநாடு,  கிழக்காசிய நாடுகள் மாநாடு நடந்து வரு கிறது. இந்த   மாநாடுகளில் பங்கேற்க  சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் முதலில் சீன பிரதமர் வென்ஜியா போவை சந்தித்துப் பேசினார்.

இந்தியா- சீனா இடையே உறவை மேம் படுத்துவது தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். அமெரிக்க  அதிபர் ஒபா மாவை இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணிநேரம் அவர்கள் பல்வேறு  விஷ யங்கள் குறித்து பேசி னார்கள். அணு   ஒப்பந்தம், அமெரிக்கா அளித்த கல்வி, பொருளாதார ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை, கடல் சார் பாதுகாப்பு, தீவிர வாதம் உள்பட பல விஷயங் களை ஒபாமாவும் மன் மோகன்சிங்கும் பகிர்ந்து கொண்டனர்.

கூட்டம்   முடிந்ததும் ஒபாமா கூறியதாவது:- இந்தியா-அமெரிக்கா இடையே பல விஷயங் களில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளோம். இரு நாடுகளுக்கிடை யிலான  பிணைப்பு தலைவர்கள்  மட்டத் தில் மட்டுமல்ல  தனிப் பட்ட முறையிலும் நீடிக் கிறது. நாங்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல் பட்டு மேம்பட முடியும் என்பதற்கு இன்றைய சந்திப்பு மிகவும் சிறப் பான ஒரு  வாய்ப்பாக அமைந்தது. இரு நாடு களுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் தொடரும்.

இவ்வாறு அதிபர் ஒபாமா கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்த போது கூறியதாவது:-

கடந்த ஓராண்டில் நாங்கள் ஒவ்வொரு துறை யிலும் முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளோம். முதலீடு, வர்த்தகம், உயர் கல்வி, அணுசக்தி மற் றும் பாதுகாப்பு ஆகிய வற்றில் இரு நாடு களுக்கிடையே உறவு வலுப்பெற்றுள்ளது. நாங்கள் ஒருங்ணைந்து செயலாற்றுவதில் எங் களுக்குள் எந்த  சிக் கலும் இல்லை என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச் சியுடன் தெரிவித்துக்  கொள்கிறேன்.

வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பயணங் கள் மூலம் நாங்கள் பல வழிகளில் வலுப் பெற்றுள்ளோம். அணு ஒப்பந்தமாகட்டும், மனிதாபிமான அடிப் படையிலான நிவாரண உதவிகளாகட்டும், கடல் சார் பாதுகாப்பு விஷயங் களாகட்டும், இப்படி எல்லா விஷயங்களும் எங்களை ஒருங் கிணைத்துள்ளன.

இதன்மூலம் போரில் இருந்து உலகை விடு வித்து சாதனை படைத் துள்ளோம். அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளுடன்  நல்லுறவு தொடரும். இந்தியாவின் சட்ட திட்டங்களுக்குட் பட்டு மற்ற நாடுகளின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்படும். சட்டத் துக்குட்பட்டே அன்னிய நாடுகளின் குறைகள் களையப்படும். அமெ ரிக்க நிறுவனங் களின் கவலைகள் தீர்க்கப் படும். - இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் கூறி னார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.