குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

இலங்கை இரட்டை நிலைப்பாடு- யெயலலிதா பிரதமருக்குக் கடிதம்.

18.11.2011  மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார் யெயலலிதா.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது மாநில மக்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, தங்களுக்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன். தேசிய பிரச்னை: மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் அது தமிழகம் தொடர்பான பிரச்னை இல்லை; தேசிய அளவிலான பிரச்னையாக பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன்.மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.
 
நீங்கள் இலங்கை அரசுடன் பேசுகிறீர்கள். அவர்களும் அது தொடர்பாக உறுதி தருகின்றனர். ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.வேதனையில் மீனவ மக்கள்: கடந்த 15-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பல்களில் வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் செல்வராஜ் என்கிற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
தலையில் இருந்து அதிகளவு ரத்தம் வந்ததையடுத்து மற்ற மீனவர்கள் அவரை கரைக்குத் தூங்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அடிக்கடி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களால் மீனவ மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு இல்லாததாக உணர்வதாகவும், தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசு தடுக்காமல் இருப்பது பற்றியும் அவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இலங்கையின் இரட்டை நிலைப்பாடு: மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது.எல்லை கடந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என ஒருபுறம் அறிக்கைகளை விட்டுக் கொண்டும், மறுபுறம் மீனவர்கள் மீது அந்த நாட்டின் கடற்படை தாக்குதல்களையும் நடத்தி வருவது தொடர்கிறது.
 
தமிழக அப்பாவி மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் சம்பவங்களை தொடராமல் இருக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் தாங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் யெயலலிதா தனது கடிதத்தில் வற்புறுத்தியுள்ளார்.
 
மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார் யெயலலிதா.
 
சற்று நேரத்திற்கு முன்னர் தனது யெயா தொலைக்காட்சியில் பேசிய ஜெயலலிதா மத்திய அரசை கடுமையாகக் குறை கூறினார். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாகவும் தனக்கு வேண்டிய நிதியைத் தராமல் தமிழக அரசை கடும் நிதி நெருக்கடிக்குள்ளாக்குவதாகவும் குற்றம் சுமத்தினார். காங்கிரஸ் ஆளும் அல்லது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு சிறப்பு நிதிஉதவிகள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மற்ற மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 21 ஆயிரத்து 614 கோடி நிதியுதவி வழங்கியுள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வித நிதியுதவியும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மரணப்படுக்கையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். மின்வாரியத்தைப் பொறுத்தவரையில், தற்போது 42 ஆயிரத்து 175 கோடியாக உள்ள மின்வாரிய ஒட்டுமொத்த கடன் ரூ. 53 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. .
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.